செவ்வாய், 7 நவம்பர், 2023

பல்லவர்கள் தமிழர்களா?


 மணி மணிவண்ணன் :
பல்லவர்கள் தமிழர்களா என்று ஒரு கேள்வி எழுந்திருக்கிறது.
பல்லவர்கள் தமிழர்கள் இல்லை என்று வைத்துக் கொள்வோம்.
அவர்கள் ஆட்சி சரிந்த பிறகு பல்லவர்கள் எங்கு போனார்கள்? என்ன மொழி பேசினார்கள்? எந்தச் சமயத்தைப் பின்பற்றினார்கள்? எந்தச் சாதியோடு மணவுறவு கொண்டார்கள்?
சரி, வேளிர்கள் தமிழர்களா?
இதென்ன கேள்வி?
பாரி, இருங்கோவேள், நன்னன், அதியமான் இவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா என்ன?
வேளிர்கள் அன்றைய துவாரகைப் பட்டினம் வீழ்ந்தவுடன் தென்னாடு நோக்கி வரத் தொடங்கினார்கள் என்று கபிலர் இருங்கோவேளைப் போற்றிப் பாடும் பாடலில் இருந்து தெரிகிறது.
சாளுக்கியர் வேளிர் மன்னர்கள். கொங்கண அரசர்கள் வேளிர். இவர்கள் குஜராத்திகளா இல்லை தமிழர்களா?
தொடக்க காலப் பல்லவர்கள் ஆந்திராவில் சாதவாகனப் பேரரசின் கீழ்ச் சிற்றரசர்களாக ஆண்டவர்கள். மெல்லத் தமிழநாட்டுக்கு வந்து காஞ்சியைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.
வடமொழியைப் போற்றினார்கள். சமணர்களாக இருந்து சைவ, வைணவர்களாக மாறினார்கள் எனலாம். அவர்கள் எப்போது தமிழர்களானார்கள் என்றூ தெரியவில்லை.
ஆனால், கட்டாயம் நந்திக் கலம்பகத்தின் நாயகன் மூன்றாம் நந்திவர்மன் தமிழன் தான்.
இன்றைய தமிழ்நாட்டில் வேளிர் குலத்தவர், பல்லவர் வழித்தோன்றல்கள் தமிழ் பேசும் குடிகளாகி ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
போதிதர்மன் தமிழ் பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால், அவரது வழித்தோன்றல்கள் தமிழர்கள்தாம்.

PG Saravanan : தமிழர்களுக்கு யாதும் ஊரே. யாவரும் கேளிர்.

Raveen S. Nathan : Most Northern South Indian dynasties originally came from the Gangetic plainsdue to the political intergration of that area within initially Nandas and eventually Maurya empires. Prakrit(S) were the official language and early Vedic Brahminism, Jainism and Buddhism were encourged within these dynastic areas. These are historical dynasties that left not just literary evidence but also arecheological evidence as well. Pallavas were non Tamil in origin and were intrumental in introducing the land grant culture in which land was donated to brahmins was introduced along with other clkearly northern cultural traits.

Raveen S. Nathan : Velirs are known only from literary evidence and cant be taken as historicallly accurate depiction. We can infer history from Cankam Tamil literature but not write history from it. The fact of Velirs coming from Gujarat has to be taken with pinch of salt as a mythology rather than real history. In thsi myth making Kapila(r) is using northern ideas about lunar and solar dynsaties to connect a clearly local tribal cheif with Dwaraka and Krishna. It is can be thrown out as nonsensical from a history point of view. Whether the Velirs were the originators of Chalukyas is just an possibility along with many other possibilities.

Vinothkumar Pasupathi :தமிழ் இலக்கியங்களில் கபாதபுரம் என்பது பாண்டியர்களின் மூழ்கிய தலைநகரம். கபாடபுரத்தின் இன்னொரு வடிவம் துவாரகை

Vinothkumar Pasupathi : Raveen S. Nathan velirs are not myth. There are rock edicts about them in during sangam and after sangam period. The maurya king Ashok mentioned about adiyaman

Vinothkumar Pasupathi : Raveen S. Nathan pallavas were offshoot of cholas and nagas from srilanka but owing to subordinate to satavahanas they adopted prakrit. The sanskrit pallava means thondai that is branch, and ilanthiraiyan was the first king of thondaimaan branch.

மணி மணிவண்ணன் : பல்லவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று எங்கும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.
தம்மைப் பரத்துவாஜ குலத்தைச் சேர்ந்த பிராம்மண ஷத்திரியர்கள் என்றுதான் கல்வெட்டுகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அவர்கள் தொடக்க காலத்தில் முழுக்க முழுக்க சாதவாகனர்களின் கீழ் சிற்றரரசர்களாக ஆந்திராவில் ஆட்சிபுரிந்திருக்கிறார்கள்.
பின்னர் களப்பிரர் படையெடுப்பால் நலிந்திருந்த தமிழகத்தின் வடபகுதியை, சோழர்களின் கீழிருந்த தொண்டைநாட்டைக் கைப்பற்றி ஆண்டார்கள்.
அவர்கள் பெயர்கள், கொண்டுவந்த ஆரியப்பண்பாடு, பிராகிருத/சமஸ்கிருதக் கல்வெட்டுகள்/செப்பேடுகள், சமஸ்கிருத அவைப்புலவர்கள் என்ற எல்லாமே அவர்களைத் தமிழர்களுக்கு அயலானவர்கள் என்று தெளிவாக அடையாளம் காட்டுகிறது.

தமிழ்கெழுமூவர் என்று போற்றப்படும் மூவேந்தர்கள் சேரர், சோழர், பாண்டியர். அவர்களுடைய தமிழ் அடையாளம் என்றுமே ஐயத்துக்கிடமாக இருந்ததில்லை.
நந்திக்கலம்பகத்தின் பாட்டுடைத்தலைவன் நந்திவர்மனுக்கு முன்பு பல்லவர்கள் தமிழின் மீது அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.
பல்லவ கிரந்தம் வடமொழியை எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட வரிவடிவம். தமிழையும் அதே போல் எழுத உருவாக்கப்பட்ட வரிவடிவத்தைத்தான் நாம் இன்றும் பயன்படுத்துகிறோம்.
பல்லவர்கள் முதலில் சமணத்தையும் பின்னர் வைதீகத்தையும் தமிழகத்தில் வேரூன்றச் செய்தார்கள். ஆனால், "இம் மண்ணிற்காக தமிழுக்காக எவ்வளவோ செய்துள்ளனர்" என்று சொல்லுமளவுக்கு அவர்கள் எதுவும் செய்யவில்லை. பல்லவர்கள் வரலாறு நல்ல பல நூல்களாக வந்துள்ளது. அவற்றைப் புரட்டிப்பார்த்தால் இது புலப்படும்.
அவர்கள் சோழர்களின் கிளை மரபினர், பீலிவளைக்கும் சோழ இளவரசனுக்கும் பிறந்த இளந்திரையன் வழிவந்தவர்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் ஏதுமில்லை.

Cheenu K Srinivasan ; தமிழர் என்று அடையாளப் படுத்திக் கொண்டாலும் "இன்றையத் தமிழ் நாட்டவர்" பலர் விவாதிப்பர். வெளிவிளக்கல் (exclusion) ஒரு தமிழர் நோய். மற்ற தென் மாநிலங்களில் இதற்கு மாறாக உள்ளடக்கல் (inclusion) தெளிவாக காணலாம். அவர் மொழி சற்று பேசி விட்டால் போதும்.

மணி மணிவண்ணன் : Cheenu K Srinivasan அப்படித்தான் தமிழகமும் இருந்தது. இன்னும் இருக்கிறது. ஒரு சில அரசியல் கட்சிகளைத்தவிர அப்படித்தான் பெரும்பாலான தமிழர்களும் இருக்கிறார்கள். வீரமாமுனிவரையும், போப்பையரையும் எல்லீசனையும் எம்ஜீஆரையும் தமிழராக ஏற்றுக் கொள்ளவில்லையா? சிக்கல் யார் தமிழர் என்ற அடையாளமல்ல. யார் தமிழருக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்பதுதான் சிக்கல். அது அவ்வளவு எளிதாகப் புலப்படுவதில்லை. அதைச் சாதி அடையாளத்தை வைத்துக் கண்டுபிடிக்க முயல்வது மூடத்தனம்.

Cheenu K Srinivasan : ஆம். மிக உண்மை. சிலர், அவர் தந்தை பாட்டனார் மறைத்த சாதிப் பெயர் எழுதத் தொடங்கி விட்டனர்.

Vijay Pallava:  பல்லவர் என்பது இனமா அல்லது அரசனா

பாலாஜி கிருஷ்ணமூர்த்தி : அபராஜிதன் தமிழ்ப்பா ஒன்றை திருத்தணியில் கோயில் கட்டிய அதிகாரி ஒருவனுக்கு பாடி அதை கல்வெய்டாகவும் வெட்டி வைத்தான். முதலில் வடமொழியை அலுவல் மொழியாக கொண்டதை புதிய நாடு மொழிப்பிரச்சினை என்ற வகையில் அனுகலாமா ஐயா?

மணி மணிவண்ணன் : பல்லவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று எங்கும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. தம்மைப் பரத்துவாஜ குலத்தைச் சேர்ந்த பிராம்மண ஷத்திரியர்கள் என்றுதான் கல்வெட்டுகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்கள் தொடக்க காலத்தில் முழுக்க முழுக்க சாதவாகனர்களின் கீழ் சிற்றரரசர்களாக ஆந்திராவில் ஆட்சிபுரிந்திருக்கிறார்கள். பின்னர் களப்பிரர் படையெடுப்பால் நலிந்திருந்த தமிழகத்தின் வடபகுதியை, சோழர்களின் கீழிருந்த தொண்டைநாட்டைக் கைப்பற்றி ஆண்டார்கள். அவர்கள் பெயர்கள், கொண்டுவந்த ஆரியப்பண்பாடு, பிராகிருத/சமஸ்கிருதக் கல்வெட்டுகள்/செப்பேடுகள், சமஸ்கிருத அவைப்புலவர்கள் என்ற எல்லாமே அவர்களைத் தமிழர்களுக்கு அயலானவர்கள் என்று தெளிவாக அடையாளம் காட்டுகிறது.

ராமன் ராஜூ
https://m.facebook.com/story.php?story_fbid=2953206358295000&id=100008169931074

Peru Murugan : பழந்தமிழ் நாட்டின் எல்லை விந்தியமலை! பிற்பாடு 1500 வருடங்களுக்கு முன்னர் கன்னடம் தெலுங்கு மொழிகள் பிறந்திருக்கவில்லை. இப்போதைய ஆந்திராவிலும் கர்நாடகத்திலும் தமிழே இருந்தது. எனவே பல்லவர்கள் தமிழரே!!!

முத்தமிழ்க் குமார் :மூன்றாம் நந்திவர்மனே உதாரணம் காட்டி விட்டாலே போதுமானது தானே...

மணி மணிவண்ணன் : பல்லவர்கள் தொடக்க காலத்தில் தமிழைப் புறக்கணித்து பிராகிருதத்தையும் சமக்கிருதத்தையும் போற்றியவர்கள். அவர்கள் பரப்பியது ஆரியப் பண்பாடு. அவர்கள் தம்மைப் பரத்துவாசக் குலத்தைச் சேர்ந்த பிரம்மசத்திரியர் என்றுதான் அடையாளப் படுத்திக் கொண்டார்கள். அவர்கள் தமிழ்க் குலமோ, தமிழ் மன்னர்களோ அல்லர்.

Mano Ramanan : இது என்ன, தெளிய வைத்து குழப்புவதா?

Mano Ramanan : ஆரியர் திராவிடர் கலப்பு குறித்து தெளிவு பெறாமல் பல்லவர் பற்றி புரிந்து கொள்ளவது சிரமம். தமிழ் மண்ணில் பார்ப்பனியத்தை ஆழமாக வேரூன்ற வைத்தார்கள் பல்லவர்.

Mano Ramanan : வன்னியர்கள் இன்று சொந்தம் கொண்டாடும் திரௌபதியம்மன் வழிபாட்டை திணித்தவர்கள் பல்லவர்கள்.

Mano Ramanan : வட தமிழ்நாட்டில் குலதெய்வ வழிபாட்டையும், கருப்புசாமி வழிபாட்டையும் தடை செய்தவர்கள் பல்லவர்கள்.

மணி மணிவண்ணன் Mano Ramanan : அதாவது தமிழ் குடி ஆனவர்கள்.

Sankagiri RajKumar : நந்தகலம்பக நாயகன் இரண்டாம் நந்திவர்மன் தானே

மணி மணிவண்ணன் : இரண்டாம் நந்திவர்மனை வெளிநாட்டிலிருந்து அழைத்து வந்தார்கள். அவனுக்குத் தமிழ் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவன் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆட்சியைத் தக்க வைக்கத் தமிழ்க்குடிகளோடு கூட்டணி அமைத்திருக்க வேண்டும். அதுவரைக்கும் தமிழை அவ்வளவாகப் பொருட்படுத்தாத பல்லவர்கள் அவனது ஆட்சியில்தான் தமிழைப் போற்றத் தொடங்குகிறார்கள். நந்திக்கலம்பகத்தின் நாயகன் மூன்றாம் நந்திவர்மன்.

கருத்துகள் இல்லை: