A Sivakumar : போரூர் பிரதான சாலையின் இரண்டுபுறமும் சேர்ந்தார் போல மொத்தம் 22 வீடுகள். எல்லாமே சொந்தக்காரங்க தான். ஒட்டுமொத்த போரூரின் 70 சதவிகத நிலங்கள் இந்த 22 குடும்பங்களுக்கு சொந்தமானது தான்.
என் தந்தைக்கு ஈடான தலைமுறையில் இந்த 22 குடும்பத்துக்கும் சேர்த்தே,
♦ ஒரே ஒரு Engineer
♦ ஒரே ஒரு SBI Bank Employee
♦ 2 Teachers
♦ 4 Government Servants
மட்டுமே இருந்தாங்க.
ஒரே ஒரு டாக்டராே, வழக்கறிஞராே கிடையாது.
Forward Caste என்ற அடையாளமிருந்தும், சொத்துக்கும், சோத்துக்கும் பஞ்சமில்லைன்னாலும் கல்வி பரவல் என்பது இவ்வளவு தான்.
இதே ஊரில் இருந்த OBC, SC & Women பட்டதாரிகளின் எண்ணிக்கை ZERO.
இதில் வியப்பூட்டும் செய்தி என்ன தெரியுமா?
எங்கப்பா சின்ன பையனா இருக்கும் போது...ஒரு சொந்தக்காரப் பெண் எப்படியாே B.A. Honours படிப்பு படித்து தேறியிருக்கிறார். அவரை பார்க்க அந்நளைய புலியூர் கோட்டத்து சொந்தங்கள் எல்லாம் மாட்டு வண்டி கட்டிக்கிட்டு ஊருக்கு வந்து போயிருக்காங்க.
இன்று என் தலைமுறையிலும் அதற்கடுத்த தலைமுறைகளிலும் இவ்வீடுகளின் வழித்தோன்றல்களை பார்த்தால்,
♦ வீட்டுக்கு பல Engineers
♦ டாக்டர் இல்லாத குடும்பங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்
♦ Goverment/Bank வேலை வாய்ப்புகளுக்கு மேலாக சம்பளம் வாங்கிக் குவிக்கும் IT Employees இல்லாத குடும்பமே கிடையாது
♦ அனைத்து பெண்களும், பட்டதாரிகள், பெரும்பாலும் எல்லாருமே வேலைக்குப் போகிறார்கள்.
ஒரே ஒரு பட்டதாரி கூட இல்லாத இதே ஊரின் OBC, SC குடும்பங்களிலிருந்து பலர் இன்று Infosys, TCS, Wipro, USA, UK, Australia என்று வளர்ந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊருக்கும் இது அப்படியே பொருந்தும்.
இந்த கல்விப் பாய்ச்சலுக்கு இங்கு வளர்ந்து செழித்த திராவிடம் தான் காரணம்.
சுமார் 2000 பள்ளிகளை மூடி, அந்தந்த சாதியை சேர்ந்தவர்கள் அவரவர் குலத்தொழிலை கற்றுக்கொண்டால் போதும் என்று சொன்ன ராஜாஜியை தோற்கடித்து...
குணாளா வா!
குலக்கொழுந்தே வா!
என்று பெரியாரும் அண்ணாவும் காமராசரை குடியாத்தம் தொகுதியில் நிற்க வைத்து, வெற்றிப் பெறச் செய்து முதலமைச்சராக்கிய நாளில் தொடங்கிய பாய்ச்சலிது. இன்று இந்தளவுக்கு வந்து நிற்கிறது.
ஆயினும் படித்துப் படடம் பெற்றுவிட்டால், நம்ம மக்களுக்கு எங்கிருந்தோ ஒரு Elite தன்மை வந்து சேர்ந்துவிடும்.
India is only for Reserved Bro USA alone is for deserved என்று தன் வரலாறு அறியாமல் ஊளையிடுவார்கள்.
படிப்பும், பணமும், பதவியும் வந்த பின் தல வரலாறு படிக்கத் தொடங்கிவிட்டப் பின் தன் வரலாற்றை எங்கிருந்து படிக்கப் போகிறார்கள்?
காமராசர் பள்ளிகள் கட்டினார் என்று இன்று வரை உயர்த்திப்பிடிக்கும் ஊடகங்கள் எதுவும், அவர் கட்டியது பெரும்பாலும் ஆரம்ப பாடசாலைகள் தான், அதற்கடுத்தடுத்து வந்த கலைஞரும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கல்விப் பரவலுக்காக என்னென்ன செய்தார்கள் என்று விரிவாக சொன்னதே இல்லை.
♦ 10வது பொதுத் தேர்வில் 5ல் 1 பாடத்தில் Fail ஆனாலும், மீண்டும் 5 பாடங்களுக்கும் சேர்த்தே தேர்வு எழுதி அனைத்திலும் Pass ஆகனும் என்ற சட்டத்தை கலைஞர் தூக்கி குப்பையில் வீசினார். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை அதிகளவில் உருவாக்கினார்.
♦ SSLCக்கு பிறகு PUC, அதன் பிறகு கல்லூரி என்றிருந்ததை 10th + 2 என்று 12 ஆண்டு படிப்பாக எம்ஜிஆர் வடிவமைத்தார். அரசு மட்டுமே Engineering College நடத்திக் கொண்டிருந்த, அங்கே இடம் கிடைக்காமல் தமிழ்நாட்டிலிருந்து பெங்களூர் சென்று கல்லூரி சேர வேண்டியிருந்த காலத்தில் தமிழ்நாடெங்கும் தனியார் Engineering Colleges உருவாக காரணமாக இருந்தார்.
♦ Engineering & Doctor College Entrance Exams ஜெயலலிதாவின் ஒரே ஒரு GO மூலம் குப்பைக் கூடைக்கு போனது. பிறப்பால் FC பிராமணராகயிருந்தும், பல்வேறு சட்டப் பஞ்சாயத்துகளுக்கு நடுவில் உச்சநீதிமன்றம் வரை போராடி OBC, SC, ST மக்களுக்கான 69% இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தினார்.
♦ இதற்கெல்லாம் அடிப்படையாகவும், அடித்தளமாகவும் இருக்கும் அறிஞர் அண்ணாவின் இரு மொழிக் கொள்கை குறித்து ஒரே ஒரு ஆய்வுக் கட்டுரை கூட இந்த ஊடகங்கள் வெளியிட்டதே இல்லை.
இப்படியான ஊடகங்களை படித்தே வளர்ந்த Elite தலைமுறையினர்களில் பலர் இன்று
- திராவிடத்தால் வீழ்ந்தோம்!
- தகுதி, தரம், திறமை!
- எவனெவனோ இன்னனக்கு படிச்சிட்டு Doctor ஆகிட்டாங்க
- Carpenter இல்லை, Plumber இல்லை, Electrucian இல்லை
- வீட்டுக்கொரு Engineer இருக்காங்க, ஊருக்கொரு Mason இல்லை
என்று Elitism பேசும் போது ஒரு நேரம் சிரிப்பாகவும் சில நேரம் கடுப்பாகவும் இருக்கும்.
இதற்கெல்லாம் மறுப்பு தெரிவித்து, தரவுகளோடும், தகவல்களோடும் ஆதாரங்களோடும் ஓட ஓட விரட்டியடித்தால் என் மீது அரசியல் சாயம் பூசப்படும்.
அப்போதெல்லாம் படித்துப் பட்டம் பெற்று பெரும் பதவியிலிருக்கும், அரசியல் சாயம் பூசமுடியாத பிரபலம், யாராவது,
நம்மை போல பேச மாட்டார்களா
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை முன்னிறுத்த மாட்டார்களா?
ஏட்டுக்கல்வி கற்றுத் தராத ஏகலைவன் கதைகளை எடுத்தியம்பமாட்டார்களா
தவம் செய்தான் என்ற ஒரே காரணத்துக்காக ராமபிரானால் தலை வெட்டப்பட்ட சம்பூக வதம் குறித்து எதிர்வாதம் செய்யமாட்டார்களா
என்றெல்லாம் ஏக்கம் பிறக்கும்.
அந்த ஏக்கம், சந்திராயன் மயில்சாமி அண்ணாதுரையால் நேற்று தான் தீரத் தொடங்கியிருக்கிறது.
சிங்கப்பூரில் நடந்த Conference ஒன்றில், தமிழர்கள் நிரம்பியிருந்த சபையில் பேசிய அவர்,
உன் சாத்திரத்தை விட
உன் முன்னோர்களை விட
உன் வெங்காயம், விளக்குமாத்தை விட
உன் அறிவு பெரிது
அதை நீ சிந்தி!
என்ற தந்தை பெரியாரின் வாசகம் ஒன்றை கூறியதோடு மட்டுமல்லாமல், பெரியாரோடு அறிஞர் அண்ணாவும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை காட்டிய போது எழுந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
~~~~~~~~~~~~
கட்டை விரலாே தலையாே இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்!
- தலைவர் கலைஞர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக