tamil.oneindia.com - Mani Singh S : பாட்னா: பீகாரில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு அளவை 65 சதவிகிதமாக உயர்த்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டது.
சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வின் விவரங்களை சட்டப்பேரவையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று அம்மாநில சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
சாதிவாரியாக மக்களின் பொருளாதார நிலைமை குறித்தும் இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளன.
பின்னர் சட்டசபையில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார், பீகாரில் 60%க்கும் அதிகமாக பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். ஆகையால் அவர்களுக்கான இடஒதுக்கீடு 30%-ல் இருந்து 43% ஆக உயர்த்தப்படுகிறது என அறிவித்தார்.
அதாவது பீகாரில் தற்போது அமலில் இருக்கும் 50 சதவீத இட ஒதுக்கீடு 65 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று நிதிஷ்குமார் அறிவித்தார்.
இதன்படி, பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு 13 % இருந்து 20 சதவிகிதம் ஆகவும் , ஓபிசி இடஒதுக்கீடு 30 % இருந்து 43 சதவிகிதமாகவும் ஆகவும் உயர்த்தப்படும். பழங்குடியினர் இடஒதுக்கீடு 2 சதவிகிதமாக நீடிக்கும். இதோடு பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்ககான(EWS) 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் சேர்ப்பதன் மூலம் இடஒதுக்கீட்டு அளவு 75 % உயரும். இதற்கான சட்ட மசோதா நடப்புக் கூட்டத் தொடரிலே கொண்டுவரப்படும்" என்று பேசினார்.
தமிழ்நாடு பாணியில் பீகாரில் நிதிஷ் அதிரடி! பிசி,எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு 65% ஆக கிடுகிடு அதிகரிப்பு! தமிழ்நாடு பாணியில் பீகாரில் நிதிஷ் அதிரடி! பிசி,எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு 65% ஆக கிடுகிடு அதிகரிப்பு!
இதையடுத்து, முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் இன்று நடைபெற்ற கேபினட் கூட்டத்தில், இட ஒதுக்கீட்டை 65 சதவீதம் உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், இட ஒதுக்கீடு உயர்வுக்கான மசோதா நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்பட உள்ளது. அதாவது வரும் 9 ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தில் இது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
சட்டமன்றத்தில் மசோதா ஒப்புதல் பெற்ற பிறகு அடுத்தகட்ட நடவடிகைகள் பின்பற்றப்படும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, சாதி வாரி கணக்கெடுப்பு நிதிஷ் குமாரின் திருப்தி படுத்தும் அரசியலை காட்டுவதாக பாஜக விமர்சித்துள்ளது. இந்தியா கூட்டணி தேசிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரி வருவதும் கவனிக்கத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக