மின்னம்பலம் - Kavi : “பெரியார்தான் அடித்தளம்”: கி.வீரமணிக்கு சோனியா காந்தி கடிதம்!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திராவிடர் கழகத் தலைவர் வீரமணிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த அக்டோபர் 14ஆம் தேதி சென்னையில் திமுக மகளிர் மாநாடு நடைபெற்றது. இதில் அகில இந்திய பெண் தலைவர்கள் வந்து கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் கலந்துகொண்டார்.
இதில் பேசிய சோனியா காந்தி, ”கடந்த 70 ஆண்டுகளில் நாம் கொண்டு வந்த உரிமைகளை பாஜக சீரழித்துவிட்டது” என்றார். தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார்.
இதற்கு பதிலளித்து கடந்த நவம்பர் 2ஆம் தேதி சோனியா காந்தியும் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், “தாங்கள் நலமுடன் இருக்க விழைகிறேன். சென்னை- பெரியார் திடலுக்கு என்னை அழைத்ததற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘இந்தியா’ (I.N.D.I.A.) கூட்டணி மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எனது நன்றியினை தெரிவிக்க விரும்புகிறேன். தங்களது கடிதத்தில் மிகவும் சரியாக விளக்கிக் காட்டியதுபோல இந்தக் கூட்டணி அரசியல் கூட்டணி என்பதைவிட மேம்பட்டது.
சமூகநீதி தேவையின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் அனைவரையும் உள்ளடக்கிய முற்போக்கான செயல்திட்டத்தின் மூலம்தான், மக்களைப் பிரித்தாளும் பாரதிய ஜனதா கட்சியின் கருத்தியலை தோற்கடிக்க முடியும். ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் கண்ணியமாக, சுயமரியாதையுடன் வாழ்க்கை நடத்திட தந்தை பெரியாரின் தொலை நோக்குதான் பாதை அமைத்துத் தந்தது.
நாடு தழுவிய சமூகநீதி இயக்கங்களின் கருத்தியல் சார்ந்த பிணைப்பிற்கு, பிற்போக்கு சக்திகளை எதிர்த்து தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் போராடியதுதான் அடித்தளமாக அமைந்துள்ளது. தந்தை பெரியாரின் தொலை நோக்கும், அவரது கொள்கை சார்ந்த உறுதியான நிலைப்பாடும் இன்றைக்கும் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்தி வழிநடத்தட்டும்!
தங்களது வருங்கால செயல்பாடுகள் வெற்றி பெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக