Thulakol Soma Natarajan : திரு. Sundar_P அவர்களின் பதிவில்
உள்ள வள்ளலார் படம் இது
இப்படம் குறித்து என்னுடைய கருத்துரை:
வள்ளலாரின் ஓவியம் சற்றே மாறுபட்டுக் காணப்படுகிறது.
வள்ளலார் உருவம் குறித்து,
தொழுவூர் வேலாயுத முதலியார்
குறிப்பிட்டவை இவை:
1.உருவத்தில் சாதாரண உயரமுள்ளவர்
மெலிந்த சரீரமுள்ளவர்.
2.எலும்புகள் தெரியும்.
3.ஆயினும் வீரிய பலமுள்ளவர்.
நிமிர்ந்த தேகம்.
4.தெளிந்த மாநிற (சாதாரண சிவப்பு ) மேனியர்.
5.நீண்ட மெல்லிய நாசியுடையவர்.
6.பறந்த பொறி பறக்குங் கண்களை உடையவர்
7.இவருடைய முகத்தில் சதா சற்று விசனக் குறிகாணப்பட்டிருந்தது.
8.இவர் யோகிகளுக்கு வழக்கமில்லாத பாதரட்சையைத் (ஆர்காட்டு சோடு) தரித்திருந்தார்.
9.இவருடைய உடை, இரண்டு வெள்ளையாடையைத் தவிர வேறில்லை
(ஒரே ஆடையை உடுத்தியிருந்ததாகவும் கேள்வி)
10.இவர் கடும் நிராகாரத் தபசி போலிருந்தார்.
11.இவர் இளைப்பாறியதாக எவரும் அறியமாட்டார்.
12.இரண்டு அல்லது மூன்று நாளைக்கொருமுறை உண்பார்.
(திரு அருட்பா உரை நடைப்பகுதி/பக்கம் 26/
திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலையம், வடலூர், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு வெளியீடு )
இந்த விவரிப்புகளைக் கொண்டு பார்க்கும்பொழுது, பதிந்துள்ள வள்ளலாரின் படம் அதில் குறிப்பிட்ட செய்திகளுடன் ஓரளவு ஒத்துப்போகிறது என்றே தோன்றுகிறது.
Ratna Laksmi : இராமலிங்கம் சுவாமிகளை படம் பிடிக்கவே இயலாதே..
ராதா மனோகர் : இந்த விடயத்தில் சில முக்கிய விடயங்கள் உள்ளன . இராமலிங்க வள்ளலார் எந்த புகைப்படத்திலும் காட்சியளிக்க மாட்டார் என்ற வாதம் இன்னொரு கோணத்தில் ஆய்வுக்கு உரியது.
வள்ளலார் காற்றோடு கலந்தார் என்ற வாதம் ஒரு கொலையை மறைக்கும் முயற்சியாகதான் எனக்கு தெரிகிறது
அதே கோணத்தில் புகைப்பட விடயத்தை நோக்கலாம் என்று தோன்றுகிறது
தியோசாபிகள் சொசைட்டியின் பிளாவ்ஸ்கி அம்மையார் எடுத்த ஒரு படத்தில் அவரது உருவம் சற்று மங்கலாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த படத்தை ஒரு நூலில் பார்த்தேன் அது எந்த நூல் என்பது எனக்கு ஞாபகம் இல்லை . அதை தேடிக்கொண்டு இருக்கிறேன்
பிளாவ்ஸ்கி அம்மையார் அந்த நூலில் மிக தெளிவாக ராமலிங்கம் பரதேசி என்று இவரை பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.
ராமலிங்க வள்ளலாரின் கருத்துக்களால் அவர் மீது கொலைவெறியோடு இருந்த பார்ப்பனீய சக்திகளே அவரது உடலை காற்றோடு கலந்தார் என்று கதை அளந்தது போல அவரது உடலை புகைப்படம் எடுக்க முடியாது என்றும் கதை அளந்திருக்கவே வாய்ப்பிருக்கிறது
மேலும் நான் பிளாவ்ஸ்கி அம்மையாரின் நூலில் பார்த்த அதே தோற்றம் இந்த படத்தில் இருக்கிறது
எனவே இது வடலூர் ராமலிங்க வள்ளலார் சுவாமிகளின் படம் என்றுதான் எண்ணுகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக