tamil.drivespark.com - Balasubramanian Thirumalaiappan : மும்பை- காந்தி நகர் இடையே இயக்கப்பட்டு வந்த வந்தே பாரத் ரயில், சேவை துவங்கப்பட்டு 6 நாளில் விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த ரயில் விபத்தில் சிக்கிய காரணம் என்ன? இதனால் ரயிலுக்கு என்ன பாதிப்பு? உண்மையில் வந்தே பாரத் ரயில் தரமானது தானா? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
மும்பை சென்ட்ரலில் இருந்து குஜராத் காந்தி நகர் வரை சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் நேற்று காலை 11.15 மணிக்கு வாத்வா - மணி நகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பயணித்துக்கொண்டிருந்த போது எருமை மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ரயில் முன் பகுதி சேதமடைந்தது. இந்த விபத்து குறித்த புகைப்படங்களும் செய்திகளும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இதற்கு முக்கியமான காரணம் இந்த ரயில் சேவையைக் கடந்த 6 தினங்களுக்கு முன்பு தான் பிரதமர் மோடி துவங்கிவைத்தார். இந்த சேவை துவங்கிய 6 நாட்களுக்கும் விபத்து, அதுவும் விபத்தில் ரயில் இன்ஜின் பாகமே உடைந்துவிட்டது. இது போக இந்த ரயில் சேவை துவங்கியது போது. இந்த ரயில் செமி ஹைஸ்பீடு ரயில் என்றும், இது பாதுகாப்பான பல வசதிகளைக் கொண்ட ரயில் என்றும் செய்திகள் வெளியாகின.
தற்போது இந்த ரயிலே விபத்தில் சிக்கியது பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது குறித்து மேற்கு ரயில்வே நிர்வாகம் அளித்த விளக்கத்தில் : "மும்பை - காந்தி நகர் இடையே ரயில் பயணித்துக்கொண்டிருந்த போது தண்டவாளத்தின் குறுக்கே 3-4 எருமை மாடுகள் வந்தது. ரயில் வேகமாக வந்து கொண்டிருந்ததால் ரயிலின் ஓட்டுநருக்கு எருமை மாட்டுடன் மோதுவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் அவர் மோதினார். இந்த விபத்தில் எருமை மாடுகள் எல்லாம் இறந்துவிட்டன. ரயில் இன்ஜினில் முன்பகுதியில் உள்ள FRP மெட்டிரியலால் செய்யப்பட்ட பகுதி மட்டும் பலத்த சேதமடைந்தது.
ரயில் செயல்பாட்டுப் பகுதிக்கு எந்த பாதிப்பு இல்லை. இந்த சம்பவத்திற்குப் பிறகு ரயில் நிறுத்தப்பட்டு முன்னர் சேதமடைந்த FRP மெட்டிரியல் அகற்றப்பட்டு ரயில் 8 நிமிடத்தில் அந்த இடத்திலிருந்து புறப்பட்டுச் சரியான நேரத்தில் காந்தி நகரைச் சென்றடைந்தது. இதனால் ரயிலுக்கோ பயணிகளுக்கோ மற்ற மனித உயிர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என விளக்கம் அளித்தனர்.
இந்த விபத்தில் நாம் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது இந்த விபத்து ரயில் 140 கி.மீ வேகத்தில் பயணிக்கும் போது நடந்த விபத்தாகும். இந்த ரயில் செமி ஹைஸ்பீடு ரயில் என்பதால் இந்த ரயில் கிளம்பிய 120 வது நொடியில் இது 140 கி.மீ வேகத்தை எட்டி பிடித்துவிடும். திறன் கொண்டது. இந்த வேகத்தில் செல்லும் போது எந்த ரயிலாக இருந்தாலும் இந்த விபத்தைத் தவிர்த்திருக்க முடியாது. இதன் காரணமாகத் தான் ரயில்வே தண்டவாள பகுதிகள் எல்லாம் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன.
இவ்வளவு பெரிய விபத்து நடந்தும் இந்த ரயிலில் முன்பகுதியில் உள்ள FRP மெட்டிரியல் மட்டுமே சேதமடைந்தது. இந்த ரயில் எவ்வளவு பாதுகாப்பானது என்பதை மட்டும் காட்டுகிறது. பழைய வகை இன்ஜின்களிலும் இதுதான் விபத்துக்கள் நடந்தால் ரயில் இன்ஜினிற்கு எந்த சேதமும் ஏற்பட்டிருக்காது. ஆனால் இந்த ரயிலின் இன்ஜினில் ஏரோ டைனமிக்ஸிற்காக இந்த FRP மெட்டிரியலில் முகப்பு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. FRP என்றால் Fiber reinforced plastic எனப்படும் இது இருப்பு போல ஸ்டிராங்கான மெட்டிரியல் கிடையாது.
இந்த ரயிலைத் தயாரிக்கும் போது இந்த பாகத்தை வழக்கமாக இன்ஜின் தயாரிக்கும் இருப்பில் கூட தயாரித்திருக்கலாம். ஆனால் இந்த ரயில் வேகமாகச் செல்லும் ரயில் என்பதால் முடிந்த அளவிற்கு இந்த ரயிலின் எடையைக் குறைக்க வேண்டும். அப்பொழுது தான் ரயிலுக்கு வேகம் கிடைக்கும் அதனால் ரயில் வெளிப்புற பாகம் முழுவதும் FRP மெட்டிரியலில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது குறைந்த எடை கொண்டது. என்பதால் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தால் ரயிலில் தரம் குறித்துச் சந்தேகப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இந்த ரயில் 140 கி.மீ வேகத்தில் வரும் போது எருமை மாடுகள் குறைக்க வந்ததைப் பார்த்த ரயிலின் ஓட்டுநர் ரயிலை பிரேக் பிடிக்க நினைத்திருந்தால் தான் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். இவ்வளவு வேகத்தில் சடன் பிரேக் பிடித்தால் ரயில் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டு சென்றிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் ரயிலில் ஓட்டுநர் இந்த விபத்தை ஏற்படுத்திவிட முடிவு செய்தார்.
இந்த ரயில் மும்பை சென்ட்ரலில் இருந்து காந்தி நகருக்கு 6 மணி நேரம் 10 நிமிடத்தில் பணிக்கிறது. இடையே சூரத், வதோதரா, ஆமதாபாத் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது. இந்த ரயிலில் மொத்தம் 2 விதமான பெட்டிகள் உள்ளன. ஒன்று எக்ஸிக்யூட்டிவிட் சேர் கார் இதில் பயணிக்க ஒருவருக்கு ரூ2,505 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவே சேர் கார் பெட்டி இருக்கிறது. இதில் பயணிக்க ரூ1,385 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மொத்தம் 16 பெட்டிகள் கொண்டது இந்த ரயில் பராமரிப்பு பணிக்காக கோச் கண்டரோல் மேலாண்மை குழுவினர் பணியில் இருப்பார்கள். இதில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொருவருக்கும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டிருக்கும். பயணிகள் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இது மட்டுமல்ல எக்ஸிக்யூடிவ் கிளாஸில் ஆட்டோமெட்டிக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் டாய்லெட்கள் விமானத்தில் உள்ளது போல பயோ வேக்யூம் டாய்லெட் வசதி இருக்கிறது. இது ஊனமுற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கண் தெரியாதவர்களுக்கும் பயன்படும் வகையில் சீட் நம்பர் பைரலி முறையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மற்ற ரயிலுடன் விபத்தில் சிக்காமல் இருக்க கவச் என்ற தானியங்கி பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக