தலைமன்னார் டாலர் பரிவர்த்தனை பிரதேசமாக மாறப்போகிறது?
திறந்த பொருளாதார கொள்கையை போன்று அமெரிக்க டாலர் மட்டுமே பயன்படுத்தும் பிரதேசமாக தலைமன்னாரை மாற்றும் ஒரு திட்டம் இலங்கை அரசின் ஆலோசனையில் உள்ளதாக தெரிகிறது
இது பற்றி இலங்கை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கூறியதாவது - மக்காவ் போன்று டொலரை தனது நாணயமாகப் பயன்படுத்தும் பொழுதுபோக்கு நிறைந்த சுற்றுலாப் பிரதேசமாக மன்னார் தீவை இலங்கை உருவாக்க முடியும்!
சிங்கப்பூர் துபாய் அல்லது ஹொங்கொங் போன்ற பொருளாதார மையங்களாக இலங்கை அமையக்கூடிய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது .தலைமன்னார் டாலர் பரிவர்த்தனை பிரதேசமாக .
மன்னார் தீவை மக்காவ் தீவைப் போன்று பொழுதுபோக்கு இடமாக மாற்ற முடியும் என அமைச்சர் கமகே தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் தெரிவித்தார்.
“டாலரில் வியாபாரம் செய்யலாம். ரூபாய் இல்லை."
மக்காவ் ஹாங்காங் டாலருடன் 1.03 மக்காவ் படாக்காவில் நாணயப் பலகையைக் கொண்டுள்ளது மற்றும் அமெரிக்க டாலர் போன்ற வெளிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்தக்கூடிய நாணயப் போட்டியையும் கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக