திங்கள், 12 செப்டம்பர், 2022

மகாத்மா காந்தி 1927 இல் யாழ்ப்பாணம் சுன்னாகம் திராவிட வித்தியாசாலைக்கு அஸ்திவாரக்கல் நாட்டினார்.

யாழ்ப்பாணதில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த திராவிடன் பத்திரிகையின் 27 - 11 - 1927 ஆம் தேதி இதழில் இந்த செய்தி பதிவாகி இருக்கிறது .

 இலங்கைக்கு மகாத்மா வந்து திரும்பிவிட்டார்
மகாத்மா காந்தியவர்கள் தமது மனைவியார் பரிவார சகிதமாக இலங்கைக்கு வந்து யாழ்ப்பாணம் நாலு நாள் தங்கி இந்தியா திரும்பி விட்டனர்.


இதுமாதிரி இலங்கைக்கு இதுவரையும் வந்து  போன  .மற்றெவருக்காயினும் மகாத்மாவுக்கு காட்டப்படும் மரியாதையும் அன்பும் உபசாரமும் காட்டப்பட்டதே இல்லையெனலாம் .
மாகாத்மாவிற்கு இலங்கையில் வேண்டிய வசதிகள் யாவும் செய்து சந்தோஷமாக்கும்படி இந்திய பிரதி காவலர் இலங்கை தேசாதிபதியை கேட்டுக்கொண்டபடி தேசாதிபதியவர்கள் தனது மாளிகைக்கு அழைத்து விருந்திட்டு உபசரித்தார்.
மகாத்மா இலங்கைக்கு சென்றவிடமெல்லாம் மக்கள் அவரை தரிசித்தற் பொருட்டும் அவரின் பிரசங்கத்தை காதினாற் கேட்டற்கும் பதினாயிர கணக்கானோர் கூடி காந்திக்கு மனமுவந்து 60000 ரூபா வரையிற் கொடுத்திருக்கின்றனர்

மகாத்மா யாழாப்பணம் வந்த ஞாபகார்த்தமாக அடிக்கல் நாடினார்.
இந்த மாசம் காலை (27 - 11 - 1927 ) ஞாயிற்று கிழமை காலை 9 மணிக்கு மகாத்மா அவர்கள் தமது திருக்கைகளினால் சுன்னாகம் திராவிட வித்தியாசாலைக்கு அஸ்திவாரக்கல் நாட்டினார்.
 அப்போது மகாத்மாவை தரிசிப்பதற்காக கூடியிருந்த சனக்கூட்டத்தின் மத்தியில் மகாத்மா அவர்கள் சொல்லியதாவது ,
சகோதர்களே உங்கள் பிள்ளைகளின் நன்மைக்கு வித்தியாசாலை எவ்வள்வு அவசியமோ,
அதுபோல ஞாபத்தில் இருந்தவேண்டியது . முதலாவது மது மாமிசம் அருந்துதல் . இறந்த ஜீவன்களை புசித்தல் இவைகளை நீக்கி உண்மையான நற்செய்கை உடையவர்களாக நீங்கள் இருப்பீர்களாகில்  நீங்கள் ஒருபோதும் தாழ்த்தப்பட்டிருக்க மாட்டீர்கள் . உங்கள் பழைய வழக்கங்களை கைவிடுங்கள். .
மற்றைய வகுப்பினரை பார்த்து முன்னேறுவதற்கு தெண்டியுங்கள்
உங்களை முன்னுக்கு கொண்டு வருவதைக்காகத்தான் நான் இந்த வேஷத்தோடிருக்கிறேன் என்பதை நீங்கள் மறக்கவேண்டாம்.
நீங்கள் கொடுக்கும் வேலையை வாங்குவதற்காக ஆயத்தக்காரனாக இருக்கிறேன் . நீங்கள் எனக்கு கொடுத்த பணமுடிப்பை அன்புடன் ஏற்று கொள்கிறேன்

NB : (1927 ஆம் ஆண்டு 60000 ரூபாய் என்றால் அது எவ்வளவு பெரிய தொகை என்று எண்ணி பார்த்து அந்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவே இல்லை ..
காந்தியை எப்பேர்ப்பட்ட ஒரு பிரமாண்டமான ஒரு பிம்பமாக நம்மவர்கள் கட்டி எழுப்பியுள்ளார்கள்?
இதை எண்ணிப்பார்க்கும் போது தலை சுற்றுகிறது!
ஒரு பம்பர் பரிசுக்கு நிகரான அளவு பணத்தையும் வாங்கிவிட்டு வகுப்பும் எடுத்துவிட்டு வருவது என்றால் எப்பேர்ப்பட்ட ஒரு திறமை வேண்டும்?  
இன்றும் கூட இதுதான் ஓரளவு நடந்து கொண்டிருக்கிறது )
 


Gandhi in Jaffna Railway station 

கருத்துகள் இல்லை: