மாலை மலர் மும்பை: மகாராஷ்டிரா மாநிலயத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு 10 நாட்கள் வழிபாடு நடத்தப்பட்டது. இதனையடுத்து, சிலை கரைப்பு தினமான ஆனந்த சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
இந்நிலையில், மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது 20 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதில், 14 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். ஊர்வலத்தின் போது சாலை விபத்தில் 4 பேரும், மரம் விழுந்து பெண் ஒருவர் என மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக