N.S.Suntharambal Singer Actress |
எம் கே தியாகராஜ பாகவதர் என் எம் சுந்தராம்பாள் போன்ற நட்சத்திரங்களோடு மேலும் பல கலைஞர்கள் பங்கு கொள்கிறார்கள்
இதில் நடித்த என் எம் சுந்தராம்பாள் அவர்கள் சிறந்த பாடகி 1936 இல் வெளிவந்த நளாயினி திரைப்படத்தில் நடித்திருக்கிறார் அவரோடு கூட நடித்தவர் வைத்தியநாத அய்யர்
என் எம் சுந்தராம்பாளின் ஒரு புகைப்படம் கூட எங்கும் கிடையாது
கூகிளில் தேடி பார்த்தேன் ஆனால் அதிசயமாக இந்த விளம்பர போஸ்டரில் அவரின் படம் (நடுவே) ஓரளவு தெளிவாகவே இருக்கிறது
எம் கே தியாகராஜ பாகவதரின் படம் கூட மிகவும் இளமையான தோற்றத்தில் இருக்கிறது . இந்த படம் அவர் திரையில் தோன்றுவதற்கு முன்பே எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.அக்கால நாடகங்களில் இசைமைப்பாளராக புகழ் பெற்றிருந்த ஹார்மோனிய சக்கரவர்த்தி சங்கீத வித்வான் பிரம்மஸ்ரீ N . S . தேவுடு அய்யரின் படமும் ஓரளவு தெளிவாகவே இருக்கிறது
இந்த படங்கள் அவர்களது குடும்பங்களை சேர்ந்தவார்க்கும் இதர ஆர்வலர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
இந்நாடகம் நடைபெறுவதாக குறிப்பிட்ட ராயல் தியேட்டர்ஸ் எது என்பது எனக்கு தெரியவில்லை
ஒரு வேளை வண்ணார்பண்ணையில் இன்றுள்ள மனோகரா தியேட்டர்தான் அக்காலத்தில் ராயல் தியேட்டர்ஸ் என்ற பெயரை கொண்டிருந்ததோ தெரியவில்லை . இது பற்றி விபரம் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாமே?
இற்றைக்கு சரியாக 87 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாடக விழா நடந்துள்ளது
அப்போதே டிக்கெட் விலைகளை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது
N.S.Thevuddu music director |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக