சனி, 17 செப்டம்பர், 2022

பேராசிரியர் சுப வீரபாண்டியனின் திராவிட பள்ளியில் சேது சமுத்திர எதிரிகளுக்கு என்ன வேலை?

 Ravishankar Ayyakkannu  :    திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் திராவிடப் பள்ளியில் சேரலாம் என்று அதன் பாடத்திட்டத்தை நோட்டம் விட்டேன்.
பூவுலகின் நண்பர்கள் சுந்தர் ராஜன் எழுதிய போலி சூழலியவாதம் குறித்த ஒரு பாடத்தையும் கற்பிக்கிறார்கள் என்பதை அறிந்த உடன் என் எண்ணத்தைக் கைவிட்டேன்.
பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களே, திராவிடம் என்னும் அரசியல் பாடத்தில் போலி சூழலியவாதத்தைக் கற்பிப்பதற்கான தேவை என்ன? அந்தப் பாடத்திட்டத்தை எழுதிய பூவுலகின் நண்பர்களின் தகுதி என்ன?
ஆள்வது திமுகவாக இருக்கும் போது, இப்படி அரசை எதிர்க்கச் சொல்லித் தந்து திராவிட இளைஞர்களை மூளைச் சலவை செய்ய வேண்டிய தேவை என்ன?
இதைப் படித்து விட்டு வருகிறவர்கள் தான் நாளை துறைமுகம், விமான நிலையம், ஏன் கலைஞர் சிலை கூட வேண்டாம் என்று போராடத் துவங்குகிறார்கள்.   

சிங்கராயர் ஆரோக்கியசாமி :  கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டிய கடும் நோய் பிடித்த நாயை நாம் என்ன செய்ய நினைப்போம்?
இது அந்த ரகம்தான். விடுங்கள். நமக்கு வேலை அதிகமாக உள்ளது.
எப்பொழுது எப்படி என்பதைக் காலம் நமக்குக் கட்டளையிடும்.
அப்போது பார்க்கலாம். உண்மையில் நேரமில்லாமல் அய்யா சுபவீயோடு ஓடிக்கொண்டிருக்கிறோம்.


தெரு நாய்கள் பற்றிய கவலை தற்போது வேண்டாம் விடுங்கள்.

Ravishankar Ayyakkannu  :  சிங்கராயர் ஆரோக்கியசாமி ஐயா, உங்களுக்கும் இதற்கும் தொடர்பே இல்லாதது போல் பேசுவது வியப்பளிக்கிறது. இது உங்கள் அமைப்பு நடத்தும் பள்ளியின் பாடத்திட்டம் தானே? இங்க யார் தெருநாய்? ஒன்றும் புரியவில்லை.

சங்கரலிங்கம் பொசெ : சிங்கராயர் ஆரோக்கியசாமி பதில் சொல்ல முடியலன்னா ஸ்கூல் பசங்க தான் கெட்ட வார்த்தை பேசுவாங்க சார்.
பாவம் சுபவீ அய்யா

Sundar Parthasarathy  : சிங்கராயர் ஆரோக்கியசாமி ஓடி?!?! அரசு முன்னெடுக்கும் சூழல் விரோத திட்டங்கள் பற்றி விளக்கப் போகிறீர்களா? அரசிடமா? மக்களிடமா? அது பற்றி ஆலோசனைகள் உண்டா அல்லது நூலாசிரியர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வீர்களா?
பின்னர், அந்த ரகம் பிரிப்பது சீமான்கள் செய்வதாமே.. அவருக்கும் இடம் உண்டா ஒரு நூல் எழுதிட?

அ. வெற்றிவேல் :  சிங்கராயர் ஆரோக்கியசாமி யாரைக் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டிய நாய்னு சொல்றீங்க
சங்கிகள் கூட இப்படி எழுதத் தயங்குவார்கள். பேரா. சுப.வீ மீது நல்ல மதிப்பு இருக்கு. அதைக் கெடுத்து விடாதீர்கள்
பூவுலகின் நண்பர்கள் ஒரு போலி சுற்றுச் சூழல் ஆர்வலர்கள். பெரியார் இருந்திருந்தால் தடியால் அடி பின்னி எடுத்திருப்பார் இந்தப் போலி சுற்றுச் சூழல் ஆர்வலர்களை

Arunkumar Dhanaraj  :  சிங்கராயர் ஆரோக்கியசாமி இது என்ன சார் பதில்? கேள்வி கேட்காதே நான் சொல்வதை கேள் என்பதா திராவிடபள்ளி?

Prem Anand :  சிங்கராயர் ஆரோக்கியசாமி ஐயா...
இது என்ன நாகரிகமற்ற பதில்..
யாரை சொல்கிறீர்கள்?


தமிழிசை மாரிமுத்து : சிங்கராயர் ஆரோக்கியசாமி
இது தரமான பேச்சாக தெரியலை அண்ணா.
உங்களிடம் இவ்வளவு இழிவான பதிலை எதிர்பார்க்கவில்லை.

தமிழிசை மாரிமுத்து  : சிங்கராயர் ஆரோக்கியசாமி
தோழர் ரவிசங்கர் அவரது அய்யத்தை கேட்கிறார், பொறுப்பில் உள்ளவர்கள் தெளிவாக விளக்கம் - தீர்வு கொடுத்தால் நல்லது தானே?
அதை விடுத்து தகுதிக்குறைவாக பேசுவது என்ன முற்போக்குன்னு புரியலை அண்ணா.… அவர் ஈழ மிட்டாய் வியாபாரத்தை பற்றி யா கேட்டார்?
இன உணர்வோடு நம் திராவிடப் பள்ளியின் பாடத்திட்டம் பற்றிய அய்யத்தைத் தானே கேட்டார்?

தமிழிசை மாரிமுத்து : யாரும் எங்களை கேள்வி கேட்கக் கூடாது, நான் சொல்வதை மறுக்காமல், சிந்திக்காமல் ஏற்றுக் கொள் என்பது திராவிடவியல் அடிப்படையன்று,
அது #பச்சைப்பார்ப்பனீயம்....

Vetri Selvan Dvs : சிங்கராயர் ஆரோக்கியசாமி அரசு நிறைவேற்றும் அவிநாசி அத்திக்கடவு திட்டம் கூட சூழலுக்கு எதிரான ஒரு திட்டம் தான்.
எங்க, போய் எதிர்த்து பிரச்சாரம் பண்ணுங்க ஷார்.… எதையும் கேள்வி கேள் என்று சொல்லிய பெரியாரின் பெயரில் இயக்கம் நடத்தி கொண்டு, கேள்வி கேட்பவரை நா ய் என்று சொல்கிறீர்கள்....
தயவு செய்து பெரியாரை விட்டுவிடுங்கள்..e

தமிழிசை மாரிமுத்து :  சிங்கராயர் ஆரோக்கியசாமி
பெருமதிப்புக்குரிய அய்யா பேரா.சுப வீ இப்படி பேச மாட்டார் ...
அவரது அணுக்கத்தோழரிடம் இம்மாதிரி சொற்களை யாரும் எதிர்பார்க்கவுமில்லை....சக மனிதனை இழிவு செய்து விட்டு நேரமில்லாமல் ஓடி என்ன செய்யப் போகிறீர்கள் அண்ணா?
காலம் என்ன கட்டளையிடும் அண்ணா ?
30 வருடம் ஈழமிட்டாய் விற்று ஈழம்
இடுகாடாகி அழிந்த பின், மவுனித்து விட்டு,
பகுத்தறிவோடு கேள்வி கேட்கும் சக மனிதனை #தெருநாய் என்று இழிவு செய்ய கட்டளையிடுமோ காலம்?
காலக் கொடுமையண்ணா

Prabhu R :  சிங்கராயர் ஆரோக்கியசாமி இது என்ன பதில் ? உங்களுக்கு பதில் சொல்ல நேரமில்லை, ஆனால் கண்டபடி திட்டி எழுத மட்டும் நேரம் இருக்கிறதா ?

Srinivasan Karunanidhi :  Ravishankar Ayyakkannu பிரபா பற்றி பதிவிட்டவரின் தாயை பற்றி கேவலமாக பேசியவர் தான் மேற்படி ஆசாமி

Raja Rajendran Tamilnadu : கபிலன் காமராஜ் தப்பான நேரத்தில டேக் பண்ணிட்டீங்களோ ? விடியட்டும் தெளியுதான்னு பார்ப்போம் !

Karthick Ramasamy :  சிங்கராயர் ஆரோக்கியசாமி ஏன் இப்படி கேள்விகளை எதிர்கொள்ள பயந்து அருவருப்பாக எழுதுகிறீர்கள்

வினோத்குமார் பி. : சிங்கராயர் ஆரோக்கியசாமி இதை கொலை மிரட்டலாக எடுத்துக்கொள்ளலாம்...
கேள்வி கேட்டால் பதறுகிறது என்றால் பள்ளி நடத்தவேண்டிய இடத்தில் இருக்க லாயக்கற்றவர் நீங்கள். உங்களுக்கு தான் பயிற்சி தேவை. சுபவீ அய்யா பார்வைக்கு .

மாறன் : கபிலன் காமராஜ் சிங்கராயருக்கு புலிகளும் சூழல் மாபியாக்களும் கடவுள்கள்.
அவர்களைக் கேள்வி கேட்டால் இவருக்கு எரியும். … See more

Nisha Tamilarasu : சிங்கராயர் ஆரோக்கியசாமி பெரியாரிய இயக்கத்தில் உள்ளவர்கள் இவ்வளவு கேவலமா கூட பேசுவார்கள் போல..

Srinivasan Karunanidhi :  Nisha Tamilarasu. பிரபாகரனை பற்றி பேசி பாருங்கள் இதை விடவும் மோசமாக பேசுவார்.

Ravishankar Ayyakkannu :  மாறன் புலிகள் தொடர்பில் அவரது உணர்ச்சியையாவது புரிந்து கொள்ள முடிகிறது. சூழல் மாப்பியா எந்த அடிப்படையில் கடவுளாகப் promote ஆனார்கள் என்று புரியவில்லை. புதிய புரவலர்களா?

அ. வெற்றிவேல் :  Srinivasan Karunanidhi ஆமாம். மனோஜ் குமார்ன்னு ஒருத்தன் இருக்கான் . அவனுக்கும் பெரியாரை விட பிரபாகரன் முக்கியம் ஆனா அவன் பெரியார் திராவிடர் கழகத்தில் முக்கியப் பொறுப்பாளன்

மாறன்: Ravishankar Ayyakkannu தோழர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

இரா இளந்தமிழன் : சிங்கராயர் ஆரோக்கியசாமி பொறுப்பற்ற, தரமற்ற பதிலை சொல்வதற்கு எதற்கு திராவிடப்பள்ளி...??
சாகாவில் சேரலாமே.....

Dawood Sheik : சிங்கராயர் ஆரோக்கியசாமி அவரும் திராவிடத்திற்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர் வார்த்தைகளில் மிக கவனம் தேவை.

A Sivakumar :  இது ஒரு தந்திரோபாய பின்நகர்வு என்பதை நீங்க புரிஞ்சுக்கனும்
என்ன???… படு கேவலமான தந்திரம்!
எல்லா தந்திரோபாய பின்நகர்வுகளும் தோல்வியை தழுவின என்பதே வரலாறு

Suba.Veerapandian :  திராவிடப் பள்ளியின் பாடத்திட்டம் குறித்த திரு ரவிசங்கர் அய்யாகண்ணுவின் பதிவைப் படித்தேன். பள்ளியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பாடத்திட்டக் குழு உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கின்றேன்.
எங்கள் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் சிங்கராயர் தன் மறுமொழியில் பதிவிட்டுள்ள சில சொற்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நன்றி!

Ravishankar Ayyakkannu : Suba.Veerapandian நன்றி, ஐயா!

Yuvaraj Raj : Suba.Veerapandian நாளும் நல்ல பண்புகளை சொல்லாலும், செயலாலும் கற்று கொடுக்கும் திராவிட இயக்கத்தின் சொத்து தோழர். சுப.வீ அவர்களின் இந்த மறுமொழி பூரிப்படைய வைக்கிறது....

அ. வெற்றிவேல் : Suba.Veerapandian பூவுலகின் நண்பர்கள் கலைஞரின் எழுதுகோல் நினைவுச் சின்னத்திற்கு எதிர்ப்பாளர்கள். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்

 Ravishankar Ayyakkannu : அ. வெற்றிவேல் திராவிடத்தின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தையே எதிர்த்தவர்கள் தான் பூவுலகின் நண்பர்கள்.

அ. வெற்றிவேல் : Ravishankar Ayyakkannu அது ஒரு நூற்றாண்டுக் கனவு என்பது இந்தப் பூமர்களுக்கு என்ன தெரியும். அண்ணாவும் கலைஞரும் போராடிப் பெற்ற திட்டத்தை புரவலர் நடராசன் போட்ட எச்ச பிஸ்கட்டுக்கு வாயசைத்த கூட்டம்

Sundar Parthasarathy : Suba.Veerapandian துணைப் பொதுச் செயலாளர், இது போன்ற சொற்கள் பேசி, அனைவருக்கும் சங்கடம் ஏற்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தப் பட்டு இருப்பார் என்றும் நம்புகிறேன். நன்றி.

Sekar Govindasamy : Suba.Veerapandian சுற்றுச் சூழல் விழிப்புணர்வு கண்டிப்பாக தேவை. அதனால் பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் பொருளுள்ளதாக இருக்கவேண்டும். We should not be carried away by Hawks.

Pukazhenthi A : Suba.Veerapandian சிங்கராயரின் மறுமொழி எத்தகையதாக இருந்தாலும், அதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
சிங்கராயருக்கு அவர் செய்த தவறினை சுட்டிக் காட்டி திருத்திக்கொள்ள சொல்கிறேன் என்று சொல்லி இருக்கலாம். சிங்கராயர் மன்னிப்பு கோர…கோரி இருக்கலாம்.
மன்னிப்பு, நமக்காக, நம்மால் விளைந்த விளைவுக்காக மட்டுமே நாம் கேட்க முடியும்

Selvam Vairam : Suba.Veerapandian ஆமாம் அய்யா நானும் தோழர் ரவிசங்கர் அவர்களின் கருத்தில் உடன்படுகிறேன் கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியின் போது செம்பரம்பாக்கம் ஏரியை திட்டமிடாமல் திறந்ததன் விளைவாக சென்னை வெள்ளக்காடாக ஆகி பொதுமக்கள் பாதிக்கப்பட்ட போது இந்த இயற்கை ஆர்வலர் போத்தேரி எனப்படும் பெரிய ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள எஸ் ஆர் எம் நிகர்நிலை பல்கலைகழகத்தின் உரிமையாளர் பாரிவேந்தரால் நடத்தப்படுகின்ற புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வள்ளுவர் கோட்டம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று பேசியவர்கள்தான் இவர்கள்

Yuvaraj Raj : சூழல் விரோத திட்டங்களை அரசு (யாராக இருந்தாலும்) எந்த காலத்தில் முன்னெடுத்தாலும் தடுக்க நினைக்க கூடாதா ? குரல் எழுப்ப வேண்டும் என சொல்லி கொடுக்க கூடாதா ?
மீத்தேன், நியூட்ரினோ வை திமுக எதற்காக எதிர்த்தது. எட்டு வழி சாலைக்கு எதிராக இன்றைய முதல்வர், அன்றை… எதிர்கட்சி தலைவர் கொடுத்த அறிக்கை என்ன?
திமுக வில் புதிதாக சுற்றுச்சூழல் அணி எதற்காக உருவாக்கப்பட்டது ?

Ravishankar Ayyakkannu : Yuvaraj Raj திராவிடப் பள்ளி என்பது அரசியல் பாடம். அதில் ஒரு நோபல் பரிசு அறிஞர் எழுதியிருந்தாலும் கூட, சூழல் காப்பு என்கிற செயற்பாட்டியப் பாடத்தைச் சேர்க்கத் தேவையில்லை. அதுவும் சூழல் காப்பு என்கிற பெயரில் தமிழ்நாட்டில் துறைமுகம், விமானநிலையம், சாலை விர… See more

Arul Prakasam : சேது சமுத்திர திட்டத்தில் திடமாக இருப்பது போல் அணுமின் திட்டம் நியூட்ரினோ போன்ற திட்டங்களை செயல் படுத்துவதில் தெளிவான பார்வை வேண்டும்.

கருத்துகள் இல்லை: