வெள்ளி, 24 ஜூன், 2022

நடிகர் மாதவனின் ராக்கெட் விஞ்ஞானமும் வேத மந்திர அம்புலி மாமா கதைகளும்

 ராதா மனோகர் : பார்ப்பனீயத்தை நாம் ஏன் மீண்டும் மீண்டும் விமர்சிக்கிறோம்?
காரணம் மிகவும் தெளிவானது
குழந்தைகளுக்கு அம்புலி மாமா கதை சொல்வதில் அவர்கள் வல்லவர்கள்
துணைக்கண்டத்தில் அவர்கள் நுழையும் போது இந்த் கதை சொல்லும் கலையை மட்டுமே கொண்டுவந்தார்கள்
இங்கே உள்ள எல்லா கலைகளையும் வளங்களையும் அறிவியலையம் தமதாக்கி கொண்டார்கள்
ஒருவர் நல்லதை கற்று தேர்வது தவறல்ல  
அது சிறப்பான பண்புதான்
ஆனால் பார்ப்பனர்கள்  வெறும் கற்பனை கதைகளை வேதம் ஞானம் என்றெல்லாம் கதையளந்து மன்னர்களை நம்ப வைத்து அவர்களின் வளங்களை , அரசுகளை பறித்து விட்டார்கள் ..
நாடுகளை பறித்து விட்டார்கள்


தமிழ் அரசர்கள் கட்டிய கோயில்கள் இன்று பார்ப்பனர்கள் கூடாரங்களாகி அவர்களுக்கே முதலுரிமை என்றாகி விட்டது
 ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியையா விரட்டிய கதைதான் இது.  

மண்ணின் மைந்தர்களின் நிலங்கள் எல்லாம் பார்ப்பனர்களின் வேதமந்திர புருடாக்களை நம்பிய அரசர்களால் பார்ப்பனர்கள் வசமாகியதுதானே வரலாறு?

பெரும்பாலான பார்ப்பனர்கள் எந்த துறையில் இருந்தாலும் தங்களது பார்ப்பனர்களை மட்டுமே வளர்த்து விட்டு அந்த துறையையே ஆக்கிரமிப்பதுதானே இன்றுவரை தொடர்க்கிறது
கமல ஹாசன் பாலச்சந்தர் விசு  மணிரத்தினம் வகையறாக்கள்   கூடுமானவரை டெல்லி கணேஷுக்களையும் மாதவன்களையும்தானே பெரிதும் வளர்த்து விடடார்கள்
இந்த மாதவனுக்கு என்னதான் தகுதி இருக்கிறது?

எத்தனை எத்தனை நல்ல நடிகர்கள் இருந்தாலும் இவரை போன்ற அக்மார்க் பூணுல்களை வளர்த்து விட்ட திரைத்துறை பூணூல்கள் கொஞ்ச நஞ்சமா?
அமேரிக்கா சென்றாலும் கூட  தங்களின் பூணூல் கலாச்சாரத்தை வாந்தி எடுத்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட கதையுண்டே?
கற்பனை கதையாளப்பது மட்டுமே தகுதியாக கொண்டு மக்களை மடையர்களாக்க கங்கணம் கட்டி கொண்டிருக்கும் கூட்டம்
இன்டெர்நெட்  வசதி உள்ள இந்த காலத்திலேயே இந்த மாதிரி ஆகாச புழுகு மூட்டைகளை இவர்களால் தன்னம்பிக்கையோடு அவிழ்த்து விட எப்படி தைரியம் வந்தது?
எல்லாம் உடன் பிறந்தவை .. பூணூலோடு கூடவே பிறந்தவை   

கருத்துகள் இல்லை: