சனி, 25 ஜூன், 2022

இலங்கை தமிழக அரசின் 2-வது நிவாரண உதவி கப்பல் கொழும்பு சென்றடைந்தது!

 Mathivanan Maran  -   Oneindia Tamil  : கொழும்பு: தமிழக மக்கள் சார்பில் இலங்கைக்கு 2-ம் கட்டமாக நிவாரணப் பொருட்களுடன் தூத்துக்குடியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கப்பல் கொழும்பு சென்றடைந்தது.
சென்னையின்முதல் ரிசார்ட் ஸ்டைல் ​​வில்லாக்களை..முன்பதிவு விலையில்புக்செய் கடைசி வாய்ப்பு!
இலங்கையில் ஏற்பட்டுள்ல பொருளாதார நெருக்கடி, உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டைத் தொடர்ந்து தமிழக மக்கள் சார்பில் அனைத்து இலங்கை மக்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


இதனடிப்படையில் கடந்த மே மாதம் 18-ந் தேதி முதல் கட்டமாக சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ30 கோடி மதிப்பிலான அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.தமிழக அரசின் இந்த நிவாரணப் பொருட்கள் ஈழத் தமிழர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

மாணவிகளுக்கு ரூ1000 வழங்கும் திட்டத்துக்காக இன்று முதல் முகாம்-உயர் கல்வி வழிகாட்டி திட்டம் தொடக்கம் மாணவிகளுக்கு ரூ1000 வழங்கும் திட்டத்துக்காக இன்று முதல் முகாம்-உயர் கல்வி வழிகாட்டி திட்டம் தொடக்கம்

இதையடுத்து 2-ம் கட்டமாக ரூ67.70 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிவாரணப் பொருட்களுடனான கப்பல் நேற்று கொழும்பு துறைமுகம் சென்றடைந்தது.

இலங்கைக்கு தமிழக அரசு 4,712 மெட்ரிக் டன் அரிசி, 250 மெட்ரிக் டன் பால் மா மற்றும் 38 மெட்ரிக் டன் மருந்துகள் ஆகியவற்றை 2-வது கப்பலில் அனுப்பி வைத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: