வியாழன், 23 ஜூன், 2022

எடப்பாடி தான் பொதுச் செயலாளர்.. ஜூலை 11ல் பொதுக்குழு கண்டிப்பா நடக்கும்.. தமிழ்மகன் உசேன் ஒரே போடு!

Vignesh Selvaraj  -    Oneindia Tamil : சென்னை : ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும். எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச் செயலாளராக வருவார் என அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
சென்னையின்முதல் ரிசார்ட் ஸ்டைல் ​​வில்லாக்களை..முன்பதிவு விலையில்புக்செய் கடைசி வாய்ப்பு!
இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத்தலைவராக தேர்வு செய்துள்ளதற்கு ஓபிஎஸ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
ஜுலை 11 பொதுக்குழு 2.0! முன்னரே போடப்பட்ட பக்கா பிளான்! இதுதான் காரணமா?பரபர பின்னணி! உற்சாக இபிஎஸ்! ஜுலை 11 பொதுக்குழு 2.0! முன்னரே போடப்பட்ட பக்கா பிளான்! இதுதான் காரணமா?பரபர பின்னணி! உற்சாக இபிஎஸ்!

நிரந்தர அவைத்தலைவர்
தற்காலிக அவைத் தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன், நிரந்தர அவைத் தலைவராக பொதுக் குழுவால் தேர்வு செய்யப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஒற்றைத் தலைமை சர்ச்சைக்கு மத்தியில் தமிழ்மகன் உசேன் நிரந்தர அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக் அறிவிக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத்தலைவராக தேர்வு செய்துள்ளது ஓபிஎஸ் தரப்பினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மீண்டும் பொதுக்குழு
தொடர்ந்து, அதிமுக-வில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது பற்றி விவாதித்து முடிவு செய்ய வேண்டும் என்றும், அடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கான தேதியையும் இப்போதே முடிவு செய்ய வேண்டும் என்றும் கோரி பொதுக்குழு உறுப்பினர்கள் 2190 பேர் கையெழுத்திட்ட கடிதத்தை சி.வி.சண்முகம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனிடம் வழங்கினார். இதையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அடுத்த அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.

செல்லாது
இந்நிலைடில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது என்று ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அவைத்தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் தேர்வு செய்ய முடியும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு அவைத்தலைவருக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

கட்சியில் ஒரே உணர்வு
இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுக அவைத்தலைவராக என்னை தேர்ந்தெடுத்ததற்கு அனைவருக்கும் நன்றி. அதிமுக தொண்டர்கள் ஒரே கட்சி, ஒரே உணர்வுடன்தான் உள்ளனர். மேடையில் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட சம்பவம் குறித்து எனக்கு தெரியாது.

எடப்பாடி தான் பொதுச் செயலாளர்
ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும். இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானம் தான் நிறைவேற்றப்படும். தீர்மானங்கள் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் பேசி முடிவு எடுப்பார்கள். எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச் செயலாளராக வருவதற்கான சூழல் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: