சனி, 25 ஜூன், 2022

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேருக்கு தகுதி நீக்க அறிவிப்பு

மாலை மலர் :    இந்த நோட்டீசை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
திலீப் லாண்டே என்ற எம்.எல்.ஏ. கவுகாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று ஏக்நாத் ஷிண்டேவுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
மராட்டிய மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-தேசிய வாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் சிவ சேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளார்.
அவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான தனி அணியை உருவாக்கி உள்ளார்.
மொத்தம் உள்ள 55 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சென்றுள்ளனர். இதனால் உத்தவ் தாக்கரே அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகமானதால் பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்: ஆதி கைலாஷ் யாத்திரைக்கு சென்ற பெண் யாத்ரீகர் மரணம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சிவசேனா தலைவர்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு சமரசப்படுத்த முயன்றனர். ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. முதல்- மந்திரி பதவியை விட்டு விலக தயார் என்று உத்தவ் தாக்கரே அறிவித்தும் பார்த்தார்.
அதையும் அதிருப்தி அணி ஏற்றுக் கொள்ளவில்லை. முதல்- மந்திரி பதவியைதான் விரும்பவில்லை என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். மகாவிகாஸ் கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறி பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதோடு தனது தலைமையிலான குழுதான் உண்மையான சிவசேனா என்றும் அவர் உரிமை கோரினார்.

கருத்துகள் இல்லை: