வியாழன், 10 பிப்ரவரி, 2022

ஒரு துணிக்காக அவர்கள் எம் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள்.. “They are ruining our future for a piece of cloth” ஷர்மிளா செய்யத்

May be an image of 4 people, beard and text that says 'BREAKING NEWS SUN NEWS வீரமங்கை முஸ்கானுக்கு பாத்திமா ஷேக் விருது! கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வீரத்தோடு தனது கல்லூரிக்குள் நுழைந்த மாணவி முஸ்கானுக்கு தமுமுகவின் பாத்திமா ஷேக் விருது வழங்கப்படும் என அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிவிப்பு! 09FEB2022 UNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in'

Sharmila Seyyid :   “They are ruining our future for a piece of cloth”
"ஒரு துணிக்காக அவர்கள் எம் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள்”
முஸ்கான் சொல்லும் இந்த கூற்றில் 'அவர்களை' நாமே சுதந்திரமாக தீர்மானிக்கும்படி அவள் விட்டது தற்செயல்.
ஆனால், அந்த 'அவர்கள்' காவி சங்கிகள் மட்டுமேயல்ல. பச்சை சங்கிகளும் என்பதையும் நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்..
Premraj Thangavel  :  எல்லோரும் சிறுபிள்ளைத்தனமாக நடக்கிறார்கள் இந்தப் பெண் உட்பட. இப்பொழுது அவள் அடிப்படைவாதிகளின் கையாளாக.
Sharmila Seyyid  :  Premraj Thangavel முஸ்கான் என்ன செய்தாள்? அவள் சிறுபிள்ளைதான் ஆனால் எதை எப்படி எதிர்கொள்ளவேண்டுமோ அதை அப்படியாக எதிர்கொண்டாள். மாமனிதர்கள் சிறுபிள்ளைத்தனமாக நடக்கிறார்கள் என்பதை ஏற்கலாம்.

Premraj Thangavel :  அதுதான் மிக கவலை அளிக்கிறது இந்தியா எப்பொழுதும் பரந்த மனப்பான்மையுடன் நடந்ந நாடு. எல்லோரும் பொறுமையுடனும் பொறுப்புடனும் நடந்து கொண்டால் இந்த விடயத்தை கையாளலாம். இப்பொழுது அரசாங்கம் உட்பட எல்லோரும் பொறுப்பற்று நடந்து கொள்கின்றார்கள். எல்லோரும் இந்தியாவில் வசிக்க வேண்டும் ஒற்றுமையாக எனவே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

முருக தீட்சண்யா
: ரொம்பவும் பிற்போக்கான மனிதர் இவர், பெரும்பான்மை சமுத்திர திரளின் பிரதிநிதி

Sharmila Seyyid  : முருக தீட்சண்யா முஸ்கான் ஒரு இளம் மாணவி. அவள் எதை செய்தாளோ தன் சக்தி முழுதையும் ஒன்று திரட்டி செய்தாள். அடிப்படைவாதிகள் யாரும் கொம்பு சீவி அவளின் சுய வலிமைக்கு முலாம் பூச வேண்டியதில்லை.

Venpura Saravanan  ·: இந்த விருது, வெங்காயமெல்லாம் தேவையற்றது. உள்நோக்கம் கொண்டது. அறச்சீற்றம் மிக்க அந்த மாணவியின் செயலும் பேச்சும் குறிப்பிட்ட மதத்தினரை தாண்டி பொதுசமூகத்தின் மனங்களை கவர்ந்திருக்கிறது. அதை இந்த விருதின் மூலம் கெடுத்துவிடக் கூடாது.

Sharmila Seyyid : வற்புறுத்தலுக்கு அணிந்து இருந்தால்,
நேற்றே கழற்ற வழி தேடி இருப்பாள்,
கம்பீரமாய் கர்சித்து இருக்க மாட்டாள்//
இப்படி சந்தடி சாக்கில் சொல்லிப்போகும் இஸ்லாமிஸ்டுகளே, "அல்லாஹு அக்பர்" மீது சத்தியமாக சொல்லுங்கள், அவள் அவ்வாறு செய்திருந்தால் அவளை நீங்கள் என்ன சொல்லி இருப்பீர்கள்? அவளை அவள் வீடே வெறுத்திருக்கும். அவள் எங்கு போவாள்?
எங்கு போவது, என்ன செய்வது என்ற கேள்விகளுக்கு பதில் தேடக் கூட அனுமதியாமல் நீங்கள் அவளது ஏழு வயதிலேயே அவள் தலையில்  ஒரு கொசுவலையை மாட்டிவிட்டு கோழி அடைக்காப்பது போல் வளப்பீர்கள்.  அதை சிந்திக்கவோ, சுவாசிக்கவோ அறியாமல் வளர்க்கப்பட்ட அவளிடம் கழற்றவில்லை, அதுவே அவள் கம்பீரம் என்று வீராப்பு பேச அசிங்கமாகவே இல்லையா?
அவள் சீற்றம் உங்களுக்கானதும் தான். அவள் கழற்றாமல் இருப்பதுவே உங்கள் மீது அவள் வீசும் கல். அதைக் கழற்றினால் நீங்கள் அவள் மீது கல்லை வீசுவீர்கள் என்பதை அவள் அறிந்தே இருக்கிறாள்.
முற்போக்காளர்கள், பகுத்தறிவாளர்கள், மதசார்பற்ற மக்களது நியாயமான முஸ்கானுக்கும் அவள் ஹிஜாபிற்கும் ஆதரவான அற எழுச்சிக்கு அருகில் உங்கள் கோர முகங்களையும் வைக்காதீர்கள்.
நீங்கள் தகப்பன், சகோதரன், காதலன், கணவன், நண்பன், ஆசிரியர் போன்ற சங்கை காரணமாகவே முஸ்கான்களின் கைகள் உங்களுக்கு முன்னால் உயராமல் உள்ளது. ஈரான் பெண்கள் போல் இங்கும் முஸ்கான்கள் உங்களுக்கு எதிராகவும் கிளர்ந்தெழும் நாளையும் சந்திக்கவே போகிறோம். அப்போது நீங்கள் கூறும் 'தெரிவு' என்ற போலி சுதந்திர வாக்குமூலங்கள் பெண்களின் கால் செருப்புகளின் கீழிருக்கும்..

Geetha Narayanan :  ஷர்மிளா இங்கு நடக்கும் மத அரசியலை எதிர்க்கிறேன்.உங்களோடான போராட்டத்திலும் உடன் நின்றிருக்கிறேன்.எனக்கு நீங்கள் கூறுவது தெளிவாகத் தெரியும்.

Pathmanathan Ranjani :  Geetha Narayanan உண்மை

Shyama Madurai  : பச்சை சங்கிகளின் பக்கத்திற்கு போனால் அவர்கள் பதிவு காணச் சகிக்கவில்லை...அந்தப்பெண் ஹிஜாப் அணிந்து தன் உடலை மறைக்கத்தான் அத்தனை துணிவோடு கர்ஜிக்கிறாள் என்று கூச்சமே இல்லாமல் எழுதுகிறார்கள்...😕😕

Perundevi Perundevi  :  பொதுவாக மதச் சம்பிரதாயங்கள் என்று வரும்போது வாணலிக்கும் நெருப்புக்கும் இடையே மாட்டிக்கொண்ட நிலைதான் பெண்களுடையது. ஷர்மி, இவ்விவகாரத்தில் உங்களுடைய பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன். உங்களுடன் மிக நெருக்கமாக உணர்கிறேன். என் முத்தங்களை இங்கிருந்தே உங்களுக்கு இடுகிறேன். ❤

Hansa Hansa  ·:  பெண்ணை முன் நிறுத்தி இரு தரப்பும் ஒளிந்து கொண்டு ஆடுகிறான்கள்.
 
Seevagan Poopalaratnam  : உண்மை எப்போதும் கசப்பானது.

கருத்துகள் இல்லை: