வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம்

 மின்னம்பலம் : தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில்... அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ‌. பன்னீர்செல்வம் இன்று (பிப்ரவரி 11) திருச்சி மாவட்ட அதிமுகவின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைவது உள்ளாட்சி மன்ற தேர்தல்தான்‌.
இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு மரண அடி கொடுக்க வேண்டும்.


கவர்ச்சியான விளம்பரங்களை செய்து திமுக ஆட்சியை பிடித்து விட்டது. ஆனால் மக்களுக்கு இவர்கள் எதுவுமே செய்யவில்லை.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அத்தோடு தமிழ்நாட்டுக்கு சட்டமன்றத் தேர்தலும் வரும்" என்று பேசியிருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்.

ஏற்கனவே அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில்..."ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமலுக்கு வந்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலோடு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலும் நடக்கும்" என்று பேசியிருந்தார்.

திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரும் என்று தொடர்ந்து சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.

வேந்தன்


கருத்துகள் இல்லை: