திங்கள், 7 பிப்ரவரி, 2022

முதல்வர் ஸ்டாலின் அறிவித்த அனைத்திந்திய சமூக நீதி கூட்டணி - காங்கிரஸ் சார்பில் வீரப்ப மொய்லியை நியமித்தார் சோனியா காந்தி

 மின்னம்பலம் : தமிழ்நாடு  முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின், இந்திய அளவில் சமூகநீதி கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தப் போவதாக கடந்த குடியரசு தினத்தன்று அறிவித்திருந்தார். அதன்படி நாட்டில் உள்ள 37 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி, சமூகநீதி கூட்டமைப்பில் அவர்களின் பிரதிநிதியை தெரிவிக்கும்படி கேட்டிருந்தார்.
இந்தப் பின்னணியில் திமுக பொருளாளரும் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு இன்று (பிப்ரவரி 7), காங்கிரஸ் கட்சியின் தலைவர் . சோனியா காந்தியை நேரில் சந்தித்து, அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுத்து, மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தை ஒப்படைத்தார்.


உடனடியாக, சோனியா காந்தி, அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லியை நியமித்து, ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். சந்திப்பின்போது ராகுல் காந்தியும் உடன் இருந்தார்."'வேந்தன்

கருத்துகள் இல்லை: