Kulitalai Mano : : இலங்கை ஜூலை கலவரம் நடந்து முடிந்தாலும் அதன் தாக்கமும் கெடுபிடிகளும்
நீண்ட நாட்களாக அரங்கேறிக் கொண்டிருந்தன.
இது பற்றி தமிழ்நாடு தலைவர்களுக்கும் இந்திய அரசுக்கும் விளக்கமாக கூறும்
பொருட்டு நேரில் 1983 ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி திரு அப்பாப்பிள்ளை
அமிர்தலிங்கம் தம்பதியர்கள் சென்னை வந்திருந்தனர்
திரு அமிர்தலிங்கம் தம்பதியர் அன்றிரவே கலைஞரின் இல்லத்திற்கு சென்று அவரோடு விரிவாக விவாதித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்
கலைஞரின் இல்லத்திலேயே இரவு உணவையும் முடித்து கொண்டு விடுதிக்கு சென்றனர்
இந்த செய்தி முதலமைச்சர் எம்ஜி அறிந்து கடுப்பாகிப் போனார்
முதலமைச்சராக இருந்தும் தன்னை சந்திக்காமல்
கலைஞரை திரு அமிர்தலிங்கம் சந்தித்தது எம்ஜி யின் சின்னபுத்தியை பிசைந்தது
அமிர்தலிங்கம் தம்பதியரை தனது இல்லத்திற்கு வருமாறு தொலைபேசியில் வற்புறுத்தியும் மறுபுறத்தில் நேரில் அவரை அழைத்து வருமாறு ஒருவரை அனுப்பியும் இருந்தார்.
நாளை வருவதாக அமிர்தலிங்கம் கூறினார்
ஏற்கனவே நேரம் அதிகமாகி விட்டது உணவும் உட்கொண்டு விட்டோம் என்று தெரிவித்தார்
ஆனால் எம்ஜியோ பிடிவாதம் பிடித்தார்
திரு அமிர்தலிங்கம் தம்பதியரும் எம்ஜியின் வற்புறுத்தலை ஓரளவிற்கு மேல் தவிர்க்க முடியவில்லை வேண்டுகோளை ஏற்று
அன்றிரவே முதல்வரின் இல்லத்திற்கு வருகை தந்தனர்
அங்கு தடல் புடலாக இரவு உணவு தயாராக இருந்தது
அமிர்தலிங்கம் அவர்கள் ஏற்கனவே தாங்கள் நன்றாக உணவு உட்கொண்டுவிட்டதாக கூறினார்கள்
எதையும் கேட்கும் நிலையில் முதல்வர் எம்ஜி இல்லை
இந்நிலையில் மீண்டும் இரவு உணவை அமிர்தலிங்கம் தம்பதியர் ஓவர் லோடாக
மென்று விழுங்கினார்கள்
மறுக்க முடியுமா? அன்புக்கட்டளை ஆச்சே?
சுருக்கமாக கலைஞரிடம் கூறிய விபரங்களை முதல்வர் எம்ஜியிடமும் கூறிவிட்டு
விடுதிக்கு வந்து சேர்ந்தனர்
அடுத்த நாள் எல்லா பத்திரிகைகளிலும் தலைப்பு செய்தி
முதல்வர் எம்ஜி யை அவரது வீட்டியேயே சந்தித்தார் இலங்கை எதிர்க்கட்சி
தலைவர் அமிர்தலிங்கம் என்று .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக