Sowmian Vaidyanathan : தமிழ்நாட்டில் வெகு அமைதியாக நடந்திருக்கும் மிகப் பெரிய புரட்சியை பற்றி நாம் எதுவுமே பேசாமல் வெற்றுக் கதைகள் பேசிக் கொண்டிருக்கின்றோமோ என்று தோன்றுகிறது.
இணைய திமுகவினர் கூட அதிகமாக இதை கண்டு கொள்ளாமல் மேம்போக்காக கடந்து செல்கின்றார்களோ என்ற ஐயமும் ஏற்படுகின்றது.
பெண்ணியம் பேசுபவர்கள், பெரியாரியவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் கூட இதை கண்டுகொள்ளவில்லையோ என்ற கவலையும் உண்டாகிறது..!
கடந்த ஒரு வாரமாக எங்கள் நிறுவனத்தில் வேலை கேட்டு தினமும் ஒன்றிரண்டு பெண்கள் வந்து கொண்டிருந்தனர்.
இன்று காலை ஒரே ஊரிலிருந்து ஐந்து பெண்கள் வந்திருந்தார்கள்.
ஏன் இப்படி என்று அவர்களிடம் விவரம் கேட்ட பொழுது... மயிலாடுதுறை ஒன்றியத்தின் கடைகோடியான மணல்மேட்டையும் தாண்டி ஒரு குக்கிராமம். இரண்டு பஸ் மாறி வர வேண்டும்.
முன்னல்லாம் பஸ்ல போக, வர 56 ரூவா ஆயிடும் சார். நெதமும் வாங்குற சம்பளத்துல 60ரூவா பஸ்ஸுக்கே போச்சுன்னா.... மீதி கிடைக்குறதுக்கு இவ்ளோ சிரமப்படனுமான்னு, வீட்லயே இருந்து விவசாய வேலை வந்தா மட்டும் செஞ்சோம் சார்.
இப்பத்தான் ஸ்டாலின் ஐயா பஸ்ஸுக்கு எங்களுக்கு எல்லாம் ஃப்ரீன்னு சொல்லிட்டாங்களே... அதான் சார் நிரந்தர வேலையா இருக்குமேன்னு கேட்டு வந்தோம்...!
அவ்ளோ தான் மேட்டர்...
மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒரு மக்கள் தலைவன்.... ஆட்சியாளனாகவும் அமர்ந்து விட்டால்...
ஒரே ஒரு சொடுக்குல... ஒரே ஒரு கையெழுத்துல.... நாட்டின் கடை கோடியில் இருக்கும் ஆங்கோர் ஏழை கிராமத்து பெண்ணுக்கும் ஒரு நிறுவனத்தில் தடையில்லாத வேலையை கிடைக்கச் செய்ய முடியும்..!
அந்தப் பெண் தினம் தினம் தன் வீட்டுக்கு கொண்டு செல்லும் 250 அல்லது 300 ரூபாய், அந்த குடும்பத்தின் வறுமைக்கு நிச்சயம் சவால் விடும். அந்த குடும்பத்தின் பிள்ளைகளுக்கான படிப்பு தடையில்லாமல் தொடரும்..!
இதை ஏன் நாம் பேசவில்லை..?! இதை ஏன் நாம் சிலாகிக்கவில்லை...?! இதை ஏன் நாம் கொண்டாடவில்லை..?!
எதிர்க்கட்சிகள் எதை வேண்டுமானாலும் வெட்டியாக பேசிக் கொண்டிருக்கட்டும்.... மக்கள்... குறிப்பாக பெண்கள், தலைவர் தளபதியாரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்..!
வாழ்த்துக்களும்.... நன்றிகளும் எங்கள் முதல்வரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக