சனி, 10 ஜூலை, 2021

பனியாக்களின் நோக்கம் கொங்கிஸ்தான்! (கொங்குநாடு அல்ல) முதலைகளுக்கு முழுங்கும் ஆசை வந்துவிட்டது!

 Vivekanandan Ramadoss  : கோவை, திருப்பூர் மக்கள் தினமலரின் பொறுக்கித்தனத்திற்கு கடும் எதிர்ப்பைக் காட்ட வேண்டியது அவசியம்.
ஏற்கனவே ஜி.எஸ்.டி யால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் கொங்கு மண்டல சிறு, குறு தொழில் நிறுவனங்களை அழிக்கும் சதியே கொங்குப் பகுதியை யூனியன் பிரதேசமாக்கும் விவாதம்.
ஏற்கனவே கோவையின் தொழில் தமிழர்களிடம் இருந்து பறிபோய்க் கொண்டிருக்கிறது.
யூனியன் பிரதேசமாகும் பட்சத்தில் மக்கள் பிரதிநிதிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு கொங்குப் பகுதி வட மாநில பனியாக்களின் கோட்டையாகவே மாறும்.
ஒரு யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு எந்த அதிகாரமும் இருக்காது என்பதற்கு பாண்டிச்சேரியும், டெல்லியும் சமகால சாட்சிகளாக இருக்கின்றன.
ஒன்றிய அரசால் தற்போது நியமிக்கப்பட்ட அமைச்சர்களில் 7 அமைச்சர்கள் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். உத்திரப் பிரதேசம் பெரிய மாநிலமாக இருப்பதில் அவர்களுக்குள்ள பாசிடிவ் இது. 39 எம்.பிக்கள் இருக்கும்போதே தமிழ்நாட்டு எம்.பிக்களால் தமிழர்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் திட்டங்களை தடுக்க முடிவதில்லை.
இந்த நிலையில் 10 எம்.பிக்களை வைத்துக் கொண்டு எந்த உரிமையை மாநிலத்திற்கு பெற முடியும்.


தனி மாநிலம்/யூனியன் பிரதேசம் என்ற சங்கிகளின் விவாதம் சாதி சங்கங்களின் விவாதமாக மாறுவதைத் தடுத்து, தொடக்கத்திலேயே முறியடிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு கோவையில் உள்ள சமூக ஜனநாயகவாதிகளுக்கு இருக்கிறது.
 தமிழ்நாடு முழுதும் உள்ள அனைவருக்கும் இந்த பொறுப்பு இருக்கிறது என்றாலும், கொங்குப் பகுதி மக்களின் மனதில் இந்த விஷ விதை விதைக்கப்படாமல் தடுக்க வேண்டிய வேலைத்திட்டத்தினை கோவையில் இயங்கும் இயக்கங்களும், சமூக ஜனநாயகவாதிகளும் உடனே துவங்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: