செவ்வாய், 6 ஜூலை, 2021

தமிழ்நாட்டில் ‘பசுமைக்குழு’ அமைப்பு” : சுற்றுச்சூழலை பாதுகாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி

 பிரேம் குமார் - கலைஞர் செய்திகள்  : சுற்றுச்சூழல், காலநிலையை கருத்தில் கொண்டு மாநில அளவில் பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
“தமிழ்நாட்டில் ‘பசுமைக்குழு’ அமைப்பு” : சுற்றுச்சூழலை பாதுகாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை!
   மாநில அளவில் பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி 10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் இந்த பசுமைக்குழு செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் தொழில்துறை, ஊரகவளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 9 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராகக் கொண்டு 6 உறுப்பினர்களைக் கொண்டு மாவட்ட அளவிலான பசுமைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.



இந்தபசுமைக் குழுவானது மரம் வளத்தை ஊக்குவிக்கும் என்றும் பொது இடங்களில் மரங்களைப் பாதுகாக்கவும், இக்கட்டான நேரத்தில் மரங்களை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை உரிய ஆலோசனைகளை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதியில் அதிக அளவில் மரங்களை வளர்க்க இந்த பசுமைக் குழு திட்டங்களை வகுக்கும் என்றும் தமிழ்நாடு அரசு அரசாணையில் தெரிவிக்கப்படுள்ளது.

கருத்துகள் இல்லை: