Vigneshkumar - tamil.oneindia.com : டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை சில நாட்களுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிய அமைச்சரவையில் உள்ள 42% பேர் மீது கிரிமனல் வழக்குகளும், 90% பேர் கோடீசுவரர்கள் என்றும் ஜனநாயகத்திற்கான சீர்திருத்த அமைப்பு (ADR) தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி இரண்டாவது முறையாகக் கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது அமைச்சரவை எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்ததது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
சுமார் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி விலகினர்.
புதிய அமைச்சரவை புதிய அமைச்சரவை மேலும், 43 பேர் புதிதாக அமைச்சர்களாகப் பதவியேற்றனர். புதிய அமைச்சரவையில் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக இருந்தது.
தமிழ்நாட்டில் இருந்து எல் முருகன் இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஏற்கனவே இணை அமைச்சராக இருந்த சிலர் கேபினெட் அமைச்சராகப் பதவி உயர்வைப் பெற்றனர்.
தற்போது பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மொத்தம் 78 அமைச்சர்கள் உள்ளனர்.
42% கிரிமினல் வழக்குகள் 42% கிரிமினல் வழக்குகள் இந்நிலையில், புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 33 அமைச்சர்கள், அதாவது 42% பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஜனநாயகத்திற்கான சீர்திருத்த அமைப்பு (ADR) தெரிவித்துள்ளது. அவர்களில் 24 அமைச்சர்கள், அதாவது 31% பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, கடத்தல் போன்ற தீவிரமான குற்ற வழக்குகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 90%, அதாவது 70 பேர் கோடீஸ்வரர்கள் ஆகும். குறிப்பாக நான்கு அமைச்சர்கள் - அமைச்சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா (ரூ 379 கோடி), பியூஷ் கோயல் (ரூ 95 கோடி), நாராயண் ராணே (ரூ 87 கோடி, ராஜீவ் சந்திரசேகர் (ரூ. 64 கோடி) ஆகியோர் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்துகளை வைத்துள்ளனர்.
குறைவான சொத்துகளைக் கொண்ட அமைச்சர்கள் குறைவான சொத்துகளைக் கொண்ட அமைச்சர்கள் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பாக 16.24 கோடி ரூபாய் உள்ளது.
அவர்களில் திரிபுராவைச் சேர்ந்த பிரதிமா பூமிக் (ரூ 6 லட்சம்), மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜான் பர்லா (ரூ 14 லட்சம்), ராஜஸ்தானைச் சேர்ந்த கைலாஷ் சௌத்ரி (ரூ 24 லட்சம்), ஒடிசாவைச் சேர்ந்த பிஷ்வேஸ்வர் துடு (ரூ 27 லட்சம்), மகாராஷ்டிராவின் வி முரளீதரன் (ரூ.27 லட்சத்துக்கு மேல்) ஆகியோர் குறைவான சொத்துகளை உடைய அமைச்சர்களாக உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக