கலைஞர் செய்திகள் : தேயிலை விவசாயிகளை ஊக்குவிக்க புது உத்தி; நீலகிரியில் அறிமுகமானது க்ரீன் டீ சாக்லேட்!
உலக சாக்லேட் தினத்தை முன்னிட்டு நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட ஹோம் மேட் சாக்லேட் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
தேயிலை விவசாயிகளை ஊக்குவிக்க புது உத்தி; நீலகிரியில் அறிமுகமானது க்ரீன் டீ சாக்லேட்!
மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தேயிலை விவசாயம், உருளைக் கிழங்கு சாகுபடி, பாரம்பரியமிக்க சாக்லேட், கேக் போன்ற பல்வேறு பணிகள் நீலகிரியில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆங்கிலேயர்களால் அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்வது ஹோம் மேட் சாக்லேட். இங்கு நிலவும் தட்பவெட்ப காலநிலை, கொக்கோ போன்ற தரமான பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் நீலகிரி ஹோம் மேட் சாக்லேட் உலக அளவில் புகழ் பெற்றதாகும்.
நீலகிரி மாவட்டத்தில் சாக்லெட் தொழிலை நம்பி சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் , இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் 80% சுற்றுலாப் பயணிகள் நீலகிரி ஹோம்மேட் சாக்லெட் வாங்கி செல்வதால் , மிகவும் லாபகரமான தொழிலாக ஹோம்மேட் சாக்லேட் தொழில் விளங்கி வருகிறது.
தேயிலை விவசாயிகளை ஊக்குவிக்க புது உத்தி; நீலகிரியில் அறிமுகமானது க்ரீன் டீ சாக்லேட்!
தற்போது நீலகிரி மாவட்டத்தில் சிறு குழந்தைகள் முதல் 80 வயது முதியவர் வரை பல்வேறு மருத்துவ குணம் கொண்ட சாக்லேட்கள் இங்கு தயாரிக்கப்படுகிறது. அந்த வரிசையில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கான சாக்லேட் , இதய நோயாளிகள் சாப்பிடும் சாக்லேட் , பல்வேறு மூலிகை மருத்துவம் கொண்ட தாவரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் சாக்லேட் நீலகிரியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று சர்வதேச சாக்லேட் தினம் கொண்டாடப்படும் நிலையில் நீலகிரியில் உள்ள பசுந்தேயிலை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இன்று க்ரீன் டீ சாக்லேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இணைய வழியில் இந்த கிரீன் டீ சாக்லேட்டுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக அதை உற்பத்தி செய்த பிரபல சாக்லேட் உற்பத்தியாளர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
சர்க்கரை நோயாளிகள், இதய பிரச்சனை உள்ளவர்கள் , சிறு குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் விரும்பி சாப்பிடும் நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் சாக்லேட்கள் நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி நாடுகளிலும் அதிக வரவேற்பு பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் தற்போது வரை நீலகிரி உற்பத்தி செய்யப்படும் ஹோம்மேட் சாக்லெட் தனித்துவத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருவது நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக