சனி, 10 ஜூலை, 2021

தமிழ்நாடு பாஜகவில் கர் புர் .. காத்திருந்தவன் பெண்டாட்டிய நேத்து வந்த ....

 Prakash JP : கமலாலயத்திலிருந்து ஏகப்பட்ட "கர் புர்" சத்தங்கள் காதை துளைக்கின்றன...
மத்திய அமைச்சரவை மாற்றம் தான் அதற்கு காரணமாம்.
காலம் காலமாக தமிழ்நாட்டில் கட்சி வளர்த்த நாடார் மக்கள் பாஜக மீது ஏக கோபத்தில் இருக்கிறார்களாம்.
ஏற்கனவே நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போன்றவர்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கிய போதும் நாடார் புள்ளிகள் பொறுமையாக அமைதி காத்தார்களாம்.
ஆனால் தற்போது முருகனுக்கு மட்டும் இணை அமைச்சர் பதவி வழங்கிவிட்டு தங்களை புறக்கணித்து விட்டதாக புலம்புகிறார்களாம்.
காலம் காலமாக கட்சிக்கு உழைத்த பொன்னாருக்கு கடைசி வாய்ப்பாக இந்த முறை அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நினைத்து இருந்த நிலையில்,
மூத்த தலைவர் பொன்னருக்கே அமைச்சர் பதவி தராதது நாடார்கள் மத்தியில் ஏகப்பட்ட புகைச்சலை கிளப்பி உள்ளதாம்.
தமிழிசைக்கு அமைச்சர் பதவி கொடுக்காமல் டம்மியான கவர்னர் பதவி கொடுத்தது கூட உள்நோக்கம் கொண்டதோ என்று தற்போது சந்தேகத்துடன் பார்க்கிறார்களாம் நாடார் புள்ளிகள்.
மாநில தலைவர் பதவியையும் அண்ணாமலைக்கு வழங்கியிருப்பதை பார்க்கும் போது தங்களை கை கழுவி விட்டு கொங்கு பக்கம் மொத்தமாக பாஜக திசை திரும்பி விட்டதாக கருதுகிறார்களாம்



நாடார்கள். வெறும் வாக்குவங்கியாக மட்டும் தான் தங்களை பாஜக பார்க்கிறது.. இதற்கான பதில் உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் கிடைக்கும் என்று சத்தமில்லாமல் சத்தியம் செய்கிறார்களாம் நாடார்கள்.
இது ஒருபக்கம் இருக்க, தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் பதவிக்கு காய் நகர்த்திக் கொண்டிருந்த பிராமண சமூகமும் ஏமாற்றத்தால் உள்ளுக்குள் எரிமலையாக வெடித்து கொண்டு இருக்கிறதாம்.

50 ஆண்டுகளாக திராவிடத்தை எதிர்த்து சனாதன தர்மம் தழைக்க பாடுபட்ட பிராமண சமுதாயத்தை பிஜேபி உதாசீனப் படுத்தி விட்டதாக கருதுகிறார்களாம். ஏற்கனவே முருகனுக்கு தலைவர் பதவி வழங்கிய போதே பல பிராமண சமூக புள்ளிகள் பட்டும் படாமலும் கட்சிப் பணியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்களாம். இது இப்படியே தொடர்ந்தால் பலரும் கட்சியையே தலைமுழுகும் நிலைக்கு செல்லும் என்பதால் ஆர்எஸ்எஸ் தலைமை மூலம் கட்சி தலைமைக்கு செய்தி அனுப்ப காத்திருக்கிறார்களாம்.
- நமது நிருபர்

கருத்துகள் இல்லை: