Kandasamy Mariyappan : பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்கும்...
திரு. நரேந்திர தாமோதரதாஸ் ஆட்சிக்கும்...
இந்துத்துவா கொள்கை தவிர்த்து, பெரிய வித்தியாசம் இல்லை என்றால் எனது நண்பர்கள் என்னை திட்டுகின்றனர்.
1. பெருந்தலைவர் அவர்கள்.....
நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வருவதற்கு முன்பே நிலக்கிழார்களிடம் கூறிவிடுகிறார்.
கோயம்புத்தூர் நாயுடுகளும், கபிஸ்தலம் மூப்பனார்களும், பூண்டி வாண்டையார்களும், உக்கடை தேவர்களும், வடபாதிமங்களம் முதலியார்களும், திருக்காட்டுப்பள்ளி அய்யர்களும், கல்லாக்கோட்டை ஜமீன்களும், நெல்லை ஜமீன்களும் தங்களுடைய ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தங்களுடைய அடிமைகள், Trust அல்லது கோவில் பெயர்களில் பதிந்து விடுகின்றனர்.
இவர்கள்தான் கட்சிக்கு நிதி அளிப்பவர்கள்!
திரு. நரேந்திர தாமோதரதாஸ் அவர்கள்...
இப்பொழுது, Contractual Farming என்ற முறையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நம்மிடமிருந்து எடுத்து அம்பானி, அதானி போன்றவர்களிடம் தரப்போகிறார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பே தனது கட்சிகாரர்கள் மற்றும் அம்பானி, அதானி போன்றவர்களிடம் அறிவித்து விடுகிறார்.
இவர்கள்தான் கட்சிக்கு நிதி அளிப்பவர்கள்!
2. பெருந்தலைவர் அவர்கள்.....
வங்கிகளை தேசியமயமாக்க எதிர்ப்பு தெரிவித்து கட்சியை உடைத்தவர்.
திரு. நரேந்திர தாமோதரதாஸ் அவர்கள்...
வங்கிகளை தனியார்மய படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
3. பெருந்தலைவர் அவர்கள்.....
பேருந்துகளை நாட்டுடமையாக்கிய பொழுது எதிர்ப்பு தெரிவித்தார். பேருந்து முதலாளிகள் கட்சிக்கு நிதி அளிப்பவர்கள்.
திரு. நரேந்திர தாமோதரதாஸ் அவர்கள்...
ரயில் மற்றும் பேருந்துகளை தனியார்மய படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். பணக்காரர்களே கட்சிக்கு நிதி அளிப்பவர்கள்.
4. பெருந்தலைவர் அவர்கள்.....
தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று ஓமந்தூரார், T.பிரகாசம், குமாரசாமி ராஜா, ராஜாஜி போன்ற முதலமைச்சர்களை மாற்றிக் கொண்டே இருந்தார். ஆதாரம் மபொசி. சி.சுப்பிரமணியம் கட்சித் தலைவராக இருந்த பொழுது குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
திரு. நரேந்திர தாமோதரதாஸ் அவர்கள்...
தான் பிரதமராக வருவதற்கு LK அத்வானியை ஓரங்கட்டியது உட்பட என்னவெல்லாம் செய்தார் என்று நாம் அறிவோம்.
ஆனால்.........
நில உச்சவரம்பு சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தி...
ஒரு குடும்பத்திற்கு 15 ஏக்கர் நிலம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும்,
உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்றும் சட்டமியற்றி பல லட்சக்கணக்கான குத்தகை விவசாயிகளை நில உடமையாளர்களாக மாற்றி,
நத்தம் பொறம்போக்கு நிலங்களில் குடிசை கட்டி வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் ஆண்ட பரம்பரைகளுக்கும் பட்டா கொடுத்து,
பேருந்தை நாட்டுடமையாக்கி,
மன்னர் மானிய ஒழிப்பு மற்றும் வங்கிகளை நாட்டுடமையாக்க முயற்சி எடுத்து அதற்கு பிரதமர் இந்திரா அவர்களுக்கு ஆதரவளித்து,
நகர் புறங்களில் குடிசையில் வாழ்ந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் கிராமங்களில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஓட்டு வீடு கட்டி கொடுத்தது போன்ற...
பல சமூக நற்செயல்கள் செய்த கலைஞர் கருணாநிதி ஆட்சியை குறை கூறி கொண்டு திரிகிறது ஒரு கூட்டம்.
அதனை நம்பிக் கொண்டிருக்கின்றனர் 18 - 30 வயதுடைய இளைஞர்கள்.
மீள் பதிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக