tamil.samayam.com : சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்த மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்ஸோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து டெல்லியில் வைத்து சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் போலி சாமியார் சிவசங்கர் பாபாவை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிவசங்கர் பாபா ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டும் நோக்கில் சுஷில் ஹரி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரிடம் சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, இந்த வழக்கில் சுஷில் ஹரி பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியைகள் பாரதி, தீபா மற்றும் சிவசங்கரின் சிஷ்யை சுஷ்மிதா ஆகிய 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், , பள்ளியின் கணினி பிரிவு ஆசிரியர் கருணா, ஹாஸ்டல் வார்டன் நீரஜா, சிஷ்யை சுஷ்மிதா ஆகியோர் மீது கடும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக சுஷ்மிதா என்ற பெண் இதே பள்ளியில் படித்து பின்னர் சிவசங்கரின் சிஷ்யையாக இருந்து வந்துள்ளார்.
இவரது படிப்பு செலவு முதல் திருமணம் செலவை வரை சிவசங்கரே ஏற்றுள்ளார். சிவசங்கர் பாபாவிடம் மாணவிகள் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? அவருக்கு எவ்வாறு பணிவிடை செய்ய வேண்டும்? என்று சுஷ்மிதாதான் பயிற்சி கொடுத்து வந்தாராம். பாபா குறி வைக்கும் மாணவிக்கு சுஷ்மிதா மூளை சலவை செய்து அந்த ஆடம்பர அறைக்கு அழைத்து செல்வது வரை சுஷ்மிதாவின் பங்களிப்பு அதிகம் என்கின்றனர்.
இவரையடுத்து, ஹாஸ்டல் வார்டானான நீரஜா மீதும் மாணவிகள் குற்றசாட்டு வைத்துள்ளனர். ஆனால், சிபிசிஐடி விசாரணையில் அவர் மீதான குற்றசாட்டுகளை நீரஜா மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. பாபாவுக்கு பகல், இரவு என அவர் விரும்பும் நேரங்களில் மாணவிகளை சப்ளை செய்ய வேண்டும். இரவு நேரத்தில் சிவசங்கர் பாபா நேரடியாக நீரஜாவை தொடர்பு கொண்டு மாணவியை அழைத்து வர சொல்வாராம்.
அதன்படி, அயர்ந்து தூங்கி கொண்டிருக்கும் மாணவியை எழுப்பி குளிக்க செய்து பாபாவின் அறைக்கு மாணவியை நீரஜா அழைத்து செல்வாராம். இப்படி பல நேரங்களில் மாணவிகளை சிவசங்கர் பாபா சீரழித்துள்ளார் என மாணவர்கள் வட்டாரத்தில் கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவசங்கர் பாபாவின் சிஷ்யை சுஷ்மிதாவுக்கு திருமணமாகி தற்போது கை குழந்தை ஒன்றும் உள்ளது. கைது செய்யப்பட்டவர் குழந்தையுடன் சிறையில் உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக