Veerakumar - /tamil.oneindia.com : சென்னை: தமிழ்நாட்டில் எதன் அடிப்படையில் வெளிமாநிலத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், வருங்காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில், இன்று, ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் நீட் தேர்வு காரணமாக அனிதா மட்டுமல்லாமல் மேலும் பல மாணாக்கர்கள் உயிரிழந்திருப்பதாகவும், அதனை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை விடுத்தார்
பிற மாநில தொழிலாளர்கள் குறிப்பாக வட மாநில தொழிலாளர்கள், தமிழகத்திலுள்ள அரசு வேலைகளில் அதிகம் புகுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
விதிமுறை மாற்றங்கள் இதற்கு பதிலளித்து பேசிய தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த10 ஆண்டுகளில் எந்த சட்டத்தின் அடிப்படையில், எந்த வழிமுறைகளை மாற்றியமைத்து தமிழர்களை தவிற வேற மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்கப்ட்டது என ஆய்வு செய்து அதை தவிர்ப்தற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தா
வெள்ளை அறிக்கை மேலும், தமிழ்நாட்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் எப்படி வந்தது என்பதை ஆராய குழு அமைக்க வேண்டும் என்று வேல்முருகன் தனது உரையில் பேசியதை குறிப்பிட்ட, பழனிவேல் தியாகராஜன், தமிழக கடன் நிலவரம் குறித்து அடுத்த மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
சட்டத் திருத்தம் தாக்கல் சட்டசபையில் இன்று, நிதிநிலை நிர்வாக பொறுப்புடைமை சட்டத்திருத்தத்தை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதன்படி, மாநிலங்கள், நிபந்தனைகளுடன் மொத்த உற்பத்தி மதிப்பில் 0.05 சதவீதம் கூடுதல் கடன் பெற பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாகவும், கடன் பெறுவதற்கான வரம்பு நடப்பு நிதி ஆண்டில் 4 சதவிகிதமாக பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் பற்றாக்குறை நீக்கம் வருவாய் பற்றாக்குறையை நீக்குவதற்கும் பற்றாக்குறையை குறைப்பதற்குமான கால அளவு 2024 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க இந்த சட்டத் திருத்தம் வகை செய்கிறது. கடந்த பத்து வருட அதிமுக ஆட்சி காலத்தில் பிற மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குறிப்பாக வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் அதிக வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது என்பது திமுக குற்றச்சாட்டு. இந்த நிலையில்தான் கடந்த 10 வருடங்களாக நடைபெற்ற பணி நியமனங்கள் குறிித்து ஆய்வு செய்வதாக அறிவித்துள்ளார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக