ஞாயிறு, 20 ஜூன், 2021

நிதியமைச்சர் பிடிஆரின் அதிகாரிகள் . .... கடந்த 10 வருஷமா கூனி குறுகி வேலை பார்த்தோம்.

May be an image of 1 person and standing

Ganapathy Sundaram : நிதியமைச்சர் பிடிஆரின் செயல்பாடுகள் குறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரித்த போது, பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதுகுறித்து  பேசிய அதிகாரி ஒருவர், “பழைய ஃபைல்ஸ நோண்டி எடுத்து ஊழலை தட்டி எடுக்குறாரு. முதல்ல நலத்திட்ட உதவிகளுக்கு ஒதுக்கிய தொகையை எடுக்க சொல்லியிருக்காரு. சின்ன சின்ன விஷயங்களை ஓரங்கட்டி விட்டு பெரிய சமாச்சாரங்களை எடுத்துட்டு வர்றாரு” என்றார்.
அமைச்சர் பிடிஆர் ரெம்போவே ஸ்ட்ரிக்டாவும் அதே சமயம் வெளிப்படையாவும் பேசுறாரு என்று தெரிவிக்கும் அந்த அதிகாரி, “கடந்த 10 வருஷமா கூனி குறுகி வேலை பார்த்தோம்.
சில விஷயங்கள் எங்களுக்கே உறுத்தலா இருக்கும். ஆனாலும், அமைச்சர் சொல்லிட்டாரே என்று செய்து வந்தோம். இப்போ எங்களுக்கு கொஞ்சம் மன நிறைவா இருக்கு. உண்மைய சொல்லனும்ன்னா கடந்த ஒரு மாதமா வந்த டெண்டர்ல ஒரு ரூபாய் கூட யாரும் பார்க்கல.


எதுனாலும் நேரடியாக அவரை சந்தித்து சொல்லச் சொல்லியுள்ளார். இடை நிறுத்தல்கள் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.
 அலுவல் ரீதியான விஷயங்கள் என்று வரும்போது, அவருடையே பி.ஏ.வையும் வெளியே அமர சொல்லிவிடுகிறார்” என்றார்.
இரவு 11 மணிக்கெல்லாம் அப்டேட் கேக்குறாரு அமைச்சரு; காலையில 7 மணிக்கெல்லாம் மீட்டிங் வைக்கிறாரு.
பல வருஷங்களா அதிகாரிகள் ஓபி அடிச்சே பழகிட்டாங்க. அதனால இப்போ வேலை பார்க்க சொன்ன அவங்க நெழியுறாங்க என்றவரிடம், கடந்த காலங்களில் அமைச்சர்களுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்திருப்பார்களே என்று கேட்டபோது,
சிரித்துக் கொண்டே, அதிமுகவுக்கு ஆதரவாக இருந்த அனைத்து அதிகாரிகளும் அப்ரூவர் ஆயிட்டாங்க அமைச்சர்கள் சொல்லிதான் செய்தோம் என்று ஒப்புதல் அளித்து விட்டனர்.
எல்லா டேட்டாவும் அவர்ட்டயே இருக்கு; அதனால் யாராலும் எதிலும் தப்பிக்க முடியவில்லை என்றார்.
விரைவிலேயே சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதுபற்றி நாம் கேட்டபோது, கருப்பு பணம் இருக்கும் வங்கியில் வேலை பார்த்தவர். அவருக்கு இந்த பட்ஜெட் சின்னதுதான் என்றார்.
இதுகுறித்து பிடிஆருக்கு நெருக்கமான வட்டாரத்தில் நாம் பேசியபோது,
“பொதுவாக அமைச்சர்களாக அதுவும் முக்கியமான நிதித்துறையில் இருக்கும் அமைச்சர்கள் அதிகாரிகள் சொல்வதைத்தான் கேட்டு வந்தார்கள். ஆனால், பிடிஆர் அதில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் குறிப்பாக தனியார் துறையில் என்பதால் அவருடைய வேகத்துக்கு இங்குள்ள அரசு அதிகாரிகளால் ஈடுகொடுக்க முடியவில்லை” என்கிறார்கள். மேலும், துறை சார்ந்து இவருக்குள்ள அனுபவமே, தொலைக்காட்சி விவாதங்கள் போன்றவற்றில் துறை ரீதியாக வலுவாக பேசுவதற்கும் காரணம் என்று நெகிழ்ச்சியடைகிறார்கள்.
- டைம்ஸ் ஆஃப் இந்தியா

கருத்துகள் இல்லை: