Arsath Kan - tamil.oneindia.com : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமிற்கு இதுவரை எந்தவொரு அரசியல்வாதியும் நேரில் செல்லாத நிலையில்,
முதல் அரசியல்வாதியாக அங்கு சென்று அகதிகளின் குறைகளை கேட்டறிந்திருக்கிறார் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள தாப்பாத்தியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.
அங்கு சென்ற கனிமொழி எம்.பி.யை தங்கள் வீடுகளுக்கு வர வேண்டும் என்றும் அப்போது தான் தங்களின் குறைகளை முழுமையாக அறிய முடியும் எனவும் அங்கிருந்த பெண்கள் கோரஸ் எழுப்பினர். by இதையடுத்து அகதிகள் முகாமில் வசிக்கும் பெண்களின் அழைப்பை ஏற்று, வீதி வீதியாக நடக்கத் தொடங்கினார் கனிமொழி எம்.பி.
கழிவறை வசதிகள் குறைவாக இருப்பதாகவும், முகாமில் முறையாக குப்பைகள் அகற்றப்படாததால் நோய்தொற்று ஏற்படும் அச்சம் நிலவுவதாகவும் பெண்கள் முறையிட்டனர்.
மேலும், மின் வயர்கள் மிகவும் தாழ்வாக செல்வதால் அதுகுறித்தும் தாங்கள் அச்சத்துடனே வாழ வேண்டியிருப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.
அகதிகள் முகாமிலிருந்தவர்கள் கூறும் குறைகளையும், புகார்களையும் குறிப்பெடுத்துக்கொண்ட கனிமொழி இதனை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அந்த ஸ்பாட்டிலேயே கேட்டுக்கொண்டார்.
இதுமட்டுமல்லாமல் கழிவறை வசதியில்லை என்ற புகாரை நேரிலேயே ஆய்வும் மேற்கொண்டார். இதனால் அகமகிழ்ந்து போன அகதிகள், கனிமொழியை பாராட்டி தள்ளியதுடன் இனிமேல் தங்களை பார்க்க அடிக்கடி முகாமிற்கு வர வேண்டும் என கனிமொழிக்கு அன்பு அழைப்பும் விடுத்தனர்.
மேலும், கூடவே தாம் எடுத்துச்சென்றிருந்த அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை முகாமில் உள்ள 505 குடும்பங்களுக்கும் வழங்கிவிட்டு புறப்பட்டார் கனிமொழி எம்.பி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக