இன்று(புதன்கிழமை) பிற்பகல் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துவரப்பட்ட குறித்த மூவரையும் சிறைச்சாலை அதிகாரிகள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
விடுதலைப்புலி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்த அவர்கள் இன்றைய தினம் தமது உறவினர்களை சந்தித்தது போன்று, நீண்ட காலமாக சிறையில் உள்ள ஏனையவர்களையும் விடுவித்து, அவர்களின் குடும்பத்துடன் இணைக்குமாறு ஜனாதிபதியிடம் தாங்கள் வேண்டுவதாகவும், தம்மை விடுவித்த ஜனாதிபதிக்கும், ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.16 முன்னாள் புலி போராளிகள் விடுதலை செய்யப்பட்டனர்
முன்னாள் போராளிகள் 16 பேர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை. செய்யப்பட்டனர்.
இதன்படி ஏற்கனவே யாழிலிருந்து ஒருவர் காலை விடுதலை செய்யப்பட்டார் எனினும் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுதலையான யாழ்பாணத்தை சேர்ந்த 9பேரும் வந்தடைந்தனர்.
இதன் பிரகாரம் விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் பெயர் விபரம்
யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த,
நடராஜா சரவணபவன்,
புருஷோத்தமன் அரவிந்தன்,
இராசபல்லவன் தவரூபன்,
இராசதுரை ஜெகன்,
நல்லான் சுவலிங்கம்,
சூரியமூர்த்தி ஜெவோகன்,
சிவப்பிரகாசன் சிவசீலன்,
மயில்வாகனம் மதன்,
சூரியகாந்தி ஜெயச்சந்திரன் ஆகியோரும்,
மன்னார் மாவட்டத்தில்,
சிமோன் சந்தியாகு,
ராகவன் சுரேஷ்,
சிறில் ராசமணி,
சாந்தன் ஸ்ராலின் ரமேஸ்,
கபிறில் எட்வேட் யூலியன்
மாத்தளை விசுவநாதன் ரமேஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக