கிருஷ்ணவேல் டி எஸ் : ஆனேட் பிலிப் என்னும் இந்த பெண்மணி கேரளாவை சேர்ந்தவர்
இசையில் மிகுந்த ஆர்வமும் திறமையும் கொண்டவர்,
டில்லியில் படித்துமுடித்து வாழ்ந்தவர், இப்போது அமெரிக்காவில் உள்ள பெர்கிலி இசை கல்லூரியில், பணி புரிகிறார், அங்கே இண்டியன் என்செம்பில் என்று ஒரு குழுவை உருவாக்கியிருக்கிறார்,
இசை ஆர்வத்திற்கு மேல் இவருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மீது ஆர்வம் போல?
இந்த குழுவை பயன்படுத்தி, 2014ல் இவர் நடத்திய இசை நிகழ்ச்சி பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை,
ஸ்பானியர், ஆப்ரிக்கர், ஆங்கிலேயர், இந்தியர், சீனர், ஜப்பானியர் என்று உலகம் முழுவதிலும் இருந்து பெர்கிலி இசை கல்லூரியில் மாணவர்களை கொண்டு இவர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை கொண்டு நடத்திய (MEDLEY - ஒரு கலைஞனின் பல பாடல்களை கலந்து நடத்தும் இசை கச்சேரி) 16 பாடல்கள் கொண்ட நிகழ்ச்சி கேட்டு பாருங்கள், ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் இவ்வளவு அட்டகாசமா என்று நம்மை வேறு ஒரு தளத்தில் மயக்கும் வியக்கவைக்கும்
இந்த பாடல்களை சுமார் 3 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் பார்த்திருக்கிறார்கள்
மேற்கத்திய இசையில், எனக்கு பிடித்த வடிவம் கோரஸ் - பலர் சேர்ந்து ஒரே பாடலை பிரித்து பிரித்து, சேர்ந்து சேர்ந்து பாடும் அந்த வடிவம் மிகவும் அற்புதமாக இருக்கும்
அந்த வடிவில் இந்த 16 பாடல்களும் அற்புதம், நேற்று ஒரே இரவில் அத்தனை பாடலும் பார்த்தேன், பெரும்பாலானா பாடல்கள் ஹிந்தி என்றாலும், முத்துக்கள் போல நடுவே தமிழ் ஒளிர்கிறது
உண்மையிலேயே வேறு லெவல் தான், youtube லிங்க் முதல் கமெண்டில்
முடிந்தால் ஹெட்போன் பயன்படுத்துங்கள், அது இன்னும் அற்புதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக