பேசும்போதெல்லாம் சிலர் அதுபற்றிய அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல் வசைபாடுவது வருத்தத்திற்குறிய செயல். அவர்களின் கேள்வியிலும் புரிதலிலும் உள்ள அறியாமையை விலக்கிட எண்ணுகிறேன். இப்படிப்பட்டோர் ஏன் பழைய முறையை விட்டுவிட்டு இந்த பெரியார் புதியதை புகுத்திடவில்லை என யார் அழுதார் என்றெல்லாம் எழுதி பதிவிடுகின்றனர். இப்படி எழுதுவோரில் பலர் தகவல் பரவலுக்கும்
அச்சுக்கோர்ப்பிற்குமான தொடர்பை அறிந்திருக்காத 2000 kids என தங்களை அறிமுகப்படுத்துவோரும், தமிழும் தமிழின் வரலாறும் தெரியாத பிற்போக்குவாதிகளே என்பதில் ஐயமில்லை. !
பழைய நடைமுறை - தமிழ் எழுத்தின் பழைய நடைமுறை என்ன என்பதை எதிலிருந்து தெரிந்துகொண்டனர்? தமிழி எனப்படும் சங்க இலக்கிய முறையா? பல்லவர்கள் எனப்படும் ஈரானியர்களால் எடுத்து வரப்பட்ட வட்டெழுத்து முறையா? பக்தி இலக்கிய காலத்து வடமொழி கலப்பு முறையா? அல்லது பிராக்ரதம் உள்ளிட்ட மொழிக்கலப்புடன் புழங்கப்பட்ட
எழுத்துசீரமைப்பிற்கு முந்தைய முறையா? இப்படி தமிழ் எழுத்துக்கள் தொடர்ந்து நசுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வடவந்தேறிகளால் மாற்றப்பட்டும் வந்தபோது பேசாமல் இருந்த நாம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப சிற்சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டதில் பிழை என்ன?
சிலர் பெரியாரின் எழுத்துச்சீர்திருத்தம் தட்டச்சு இயந்திரத்தின் தேவைக்காக மட்டும் என்று சிலர் கூறுவதிலும் சிறு பிழையுள்ளது. அந்தச்சீர்திருத்தம் அச்சுக்கோர்ப்பு எனும் தொழில் மூலம் நிறைய தமிழ் தகவல்கள் பரவலாக மக்களிடம் போய்சேர அச்சுக்கோர்க்கும் வேலை துரிதப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்ட போது தேவையே கண்டுபிடிப்புகளின் அடிப்படை என்ற கோட்பாட்டில் மாற்றம் ஏற்கப்பட்டது.
உங்களுக்குத் தெரியுமா ணா னா லை ளை என்று எழுதும் போது இப்போது துணைக்கால் என ஒரேயொரு கூடுதல் எழுத்துருவிவைக்கொண்டு ஏற்கெனவே இருக்கும் உயிர்மெய் எழுத்தில் இவற்றை அடுக்கமுடிந்தது.
இது இல்லாதபோது இப்படித்தனித்தனி எழுத்துருக்களுக்கு உலோக எழுத்துருக்கள் பல சேர்த்தால் மட்டுமே தகவல் அச்சுக்கு கட்டமைக்கவியலும்.
இன்றைய கணினி தட்டச்சு போல எளிதான செயல் அல்ல அச்சுக்கோர்க்கும் தொழில். ஒவ்வொரு எழுத்துருவும் ஈயத்தால் ஆன கனமான உலோகத்தில் கண்ணாடி பிம்பமாக (எழுத்துகளை கண்ணாடியில் பார்ப்பது போல) இருக்கும்,
இப்படி பல எழுத்துக்களை தேடித்தேடி கட்டமைக்கும் செயல் மிகவும் கடினம்.
கீழேயுள்ள படம் மூலம் இந்தத்தொழில் வழக்கத்தில் இருந்தபோது இது எத்தகைய கடினமான பணி என விளக்கும் என்றெண்ணுகிறேன். புரிதலின்றி மேலோட்டமாக பேசுவது நம்மைநாமே இகழ்வதாய் முடியும் எனவே பெரியாரின் எழுத்துச்சீர் திருத்தம் தமிழில் வடமொழி கலப்பைத்தவிர்த்தும் தமிழ் கருத்துப்பரவல் விரைவுபடுத்தவும் இன்றைய கணினி தமிழ் நுழைவிற்கும் அடிப்படையாகவும் அமைத்தது என்பதை கொண்டாடுவோம்.
படக்குறிப்பு: இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டவை. உரிமம் அதனதன் உரிமையாளர்களுக்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக