வெள்ளி, 12 மார்ச், 2021

"தமிழி" எழுத்தை ஆர்வத்துடன் கற்கும் கரூர் பள்ளி மாணவ, மாணவிகள்

தமிழி
BBC :தமிழ் மொழியின் ஆதி எழுத்து வடிவமான தமிழியை கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் கற்று வந்த நிலையில், கரூரில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவர்கள் தமிழியை எழுதப் படிக்க கற்றுள்ளனர். தொடர்ந்து தமிழியை கற்றுக் கொடுப்பதை ஓர் இயக்கமாக தொடங்கி இதுவரை சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தமிழியை எழுதப் படிக்க கற்றுக் கொடுத்து வருகிறார் பள்ளி முதல்வர் ஒருவர்.

கரூரில் உள்ள தனியார் பள்ளியின் முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன். திருவள்ளுவர் மாணவர் இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் தொடங்கிய சிறிய முயற்சியின் விளைவாக இன்று தமிழி பள்ளி மாணவர்களிடம் எளிமையாக பரவியுள்ளது.  "தமிழியை ஓர் ஆர்வத்தில் கற்றுக் கொண்டேன். கல்வெட்டுகளில் உள்ள தமிழ் மொழியின் ஆதி எழுத்து வடிவம் தமிழி எனப்படுகிறது. தமிழியை கற்றுக் கொண்டதால், கல்வெட்டுகளையும் படிக்க முடிந்தது. 

இதை இளைய தலைமுறை மாணவர்கள் கற்றுக் கொண்டால். தமிழின் தொன்மையையும், தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை கல்வெட்டுகள் மூலம் அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என்பதற்காக நான் முதல்வராக உள்ள பள்ளியில் ஆசிரியர்களுக்கு தமிழியை கற்றுக் கொடுத்தேன் அவர்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தோம். இப்படித்தான் ஆரம்பமானது. இன்று நான் முதல்வராக உள்ள பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளில் 9 ஆயிரம் மாணவ, மாணவிகள் தமிழியை எழுத, படிக்க கற்றுள்ளனர்" என்றார்.

தனது பள்ளியில் மட்டுமல்லாது, கரூரில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளி, தனியார் கல்லூரி, சேலம், நாமக்கல், மதுரை துறையூர் என கரூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் இவரது தமிழி பயிற்சி தொடர்கிறது.

தமிழி

ராமசுப்பிரமணியன் முதன்மை முதல்வராக உள்ள பள்ளியில் தமிழி கற்றுக் கொண்ட மாணவ, மாணவர்கள் ஒன்றிணைந்து திருக்குறளை தமிழியில் எழுதியுள்ளனர். அதுமட்டுமல்லாது, ஒரு சாதனை முயற்சியாக 4,500 மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து பத்துபாட்டு, எட்டுத் தொகை, நாலடியார், நான்மணிக்கடிகை என 36 சங்க இலக்கிய நூல்களை தமிழியில் எழுதியுள்ளனர்.

தமிழியில் எழுதிய சங்க இலக்கிய நூல்களை செம்மைப்படுத்தி, நூல் வடிவில் பிரசுரிக்க முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

தமிழி

"எட்டாம் வகுப்பு படிக்கும்போது வாரத்துக்கு ஒரு வகுப்பு என தமிழி கற்றுக் கொண்டோம் கடந்த ஆண்டு சாதனை முயற்சியாக 4 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து தமிழ் இலக்கியங்களை தமிழியில் எழுதிபோது, நான் புறநானுறு பாடல்களை தமிழியில் எழுதினேன்" என்றார் ஒன்பதாம் வகுப்பு மாணவர் தரணீஸ்.

அபிநயா என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி கூறுகையில், "தமிழியை 3 வார காலத்தில் கற்றுக் கொண்டேன். நமது முன்னோர்களின் எழுத்து வடிவத்தை கற்றுக் கொள்வது பெருமையாக உள்ளது. எனது வீட்டருகே உள்ள 6-ஆம் வகுப்பு படிக்கும் தோழிக்கு தமிழி கற்றுக் கொடுத்தேன்" கூறினார்.

தமிழி

தமிழி, தமிழகத்தை பொறுத்தவரை குறியீடுகளுக்கு அடுத்த வரி வடிவம் தமிழ் பிராமி எழுத்து வடிவமாகும். இதை பண்டை தமிழ் எழுத்துக்கள் எனவும், தமிழி எனவும் தமிழராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கீழடி அகழாய்விலும் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

2 வாரங்களில் தமிழி கற்கலாம்

முறையான எளிமையான பயிற்சி எடுத்துக் கொண்டால், இரு வாரங்களில் தமிழியை கற்றுக்

கருத்துகள் இல்லை: