காதலிக்க தெரிந்த சுந்தரராஜ்க்கு திருமண ஏற்பாட்டை நிறுத்துவதற்கு திராணியில்லை.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் இந்திரா நகரில் தனி வீடு எடுத்து தங்கி இருக்கும் சுந்தர்ராஜ் வீட்டிற்கு 6-3-2021 அன்று வினோதோ வந்திருக்கிறார்.
7-3-21 இரவு வினோதாவின் பெற்றோருக்கு அவர் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து விட்டார் என்ற செய்தி காவல் துறையால் கொடுக்கப்பட்டிருக்கிறது.
விரைந்து சென்ற வினோதாவின் சகோதரனும் புகார்தாரருமான வினோத் கூறுகிறார்:
பிணவறையில் வைத்து தான் என் தங்கையின் உடலை காட்டினார்கள்.
ஏன் அவ்வளவு சீக்கிரம் உடலை அப்புறப்படுத்தினார்கள் என்று தெரியவில்லை.
என் தங்கையின் வலது நெற்றியிலும் பின் மண்டையிலும் பலத்த காயங்கள் இருந்தன. தலையின் பின்புறத்தில் ரத்தம் பெருக்கெடுத்து ஓடி இருந்தது.
"தூக்குப் போட்டுக் கொண்டதாக கூறுகிறீர்களே... ஏன் இத்தனை பலத்த காயங்கள்" என்று விசாரித்தபோது தூக்கில் தொங்கிய வினோதாவின் துப்ப்பட்டாவை அறுத்து கீழே இறக்கிய போது ஏற்பட்ட காயம் என்கிறார் சுந்தர்ராஜ்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174 இன் கீழ் (மரணத்தில் சந்தேகம்) வழக்கு பதிவு செய்த காவல்துறை பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடுத்த அழுத்தத்தின் காரணமாக ipc 506 ( தற்கொலைக்கு தூண்டியது) மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 3(2) iv பிரிவின் கீழ் வழக்கை பதிவு செய்துள்ளது.
இன்று (9-3-21) காலையில் செய்தி கிடைத்தவுடன் மக்கள் மன்றத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்தோம்.
பிணவறையில் வினோதாவின் உடலைப் பார்த்தபோது நெற்றியில் வெட்டுக் காயமும் அதில் தையலும் போடப்பட்டிருந்தது.
தையல் எப்போது எப்படி வந்தது என்று புரியவில்லை.
கிழக்கு டவுன் காவல் நிலைய ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் அவர்களை சந்தித்து எமது சந்தேகங்களை எழுப்பினோம்.
இன்றுதான் நான் பணியில் சேர்ந்தேன். ஆகையால் விபரங்கள் சரிவர தெரியவில்லை என்றார். விசாரணை அதிகாரி ஏஎஸ்பி கிரண் சுருதி எங்கள் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க காவல் நிலையத்திறகே வந்தார்.
முதல் தகவல் அறிக்கை பதிவான உடன் நிவாரணத்தில் 25% வழங்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.
ஏற்பட்டுள்ள காயங்களை பார்க்கும் போது கொலையாகவும் இருக்கலாம்; கொலை யாகாத குற்றமுறும் மரணமாக இருக்கலாம் என்றோம் அந்த விசாரணை அதிகாரியிடம். விசாரணையில் அப்படி தெரிய வந்தால் உடனடியாக முதல் தகவல் அறிக்கையை மாற்றியமைப்போம்.
இது உறுதி என்றார் அவர்.
அந்த வகையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடியாக ஒரு இலட்சம் வழங்க வேண்டும். இதில் தாமதிப்பதற்கு காரணம் ஏதும் இல்லையே என்றோம்.
2 நாட்களுக்குள் நிவாரண தொகையை வழங்கி விடுகிறோம் என உறுதியளித்தார் ஏஎஸ்பி.
"படித்து அரசு அதிகாரியாக உயர்ந்த எனது தங்கை எங்கள் குடும்பத்தை பார்த்துக் கொள்வார் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இருந்தோம்" என்று வினோதாவின் சகோதரர் கதறி அழுதார்.
ஒவ்வொரு வன்கொடுமைத் தாக்குதலுக்கும் இப்படி வெறும் எதிர்வினை மட்டும் ஆற்றிவிட்டு வருவது எந்த வகையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது என்ற கவலையோடு வீடு திரும்பினோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக