செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி (தனி), நெய்வேலி, திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாச்சலம், கீழ்பென்னாத்தூர், காஞ்சிபுரம், மேட்டூர், சேலம் (மேற்கு), சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), கீழ்வேலூர் (தனி), ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்).
தமிழக சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள
பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்தெந்த
சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து அ.தி.மு.க. -
பா.ம.க. நிர்வாகிகள் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த நிலையில், இன்று (10/03/2021)
அ.தி.மு.க.- பா.ம.க. இடையே தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த
ஒப்பந்தத்தில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை
முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும்,
தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர்
ராமதாஸ், பா.ம.க.வின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர்
கையெழுத்திட்டனர்.
தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தின் படி, செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி (தனி), நெய்வேலி, திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாச்சலம், கீழ்பென்னாத்தூர், காஞ்சிபுரம், மேட்டூர், சேலம் (மேற்கு), சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), கீழ்வேலூர் (தனி), ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) ஆகிய 23 சட்டமன்றத் தொகுதிகளில் பா.ம.க. போட்டியிடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக