தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதையொட்டி திருச்சியின் சிறுகனூரில் திமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை ஸ்டாலின் வெளியிட்டார். அவர் கூறுகையில் பொருளாதாரம், வேளாண்மை, நீர் வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நக்ரப்புற வளர்ச்சி, ஊரக உட்கமைப்பு, சமூக நீதி ஆகிய அழைத்தும் முக்கியமானவை
30 சதவீதம் இடஒதுக்கீடு இந்த 7 துறைகளையும் சீரமைப்பதே எனது முதல் பணி. திமுக ஆட்சியில் சமூகநீதியின் கீழ் பெண்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
அதை நீங்கள் நன்று அறிவீர்கள். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, வேலைவாய்ப்பில் 30 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
மகளிர் தினம் அந்த வகையில் நாளை மார்ச் 8 மகளிர் தினத்தையொட்டி ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிடுகிறேன். நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். தமிழகத்தில் ரேஷன் பொருள்கள் வாங்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும்
ரேஷன் அட்டை இதன் மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் அனைவரும் பயன்பெறுவர். பட்டியலினத்தவர், பழங்குடியினர், மிகவும் பிறபடுத்தப்பட்டோருக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக உயர்த்தப்படும். மனித கழிவுகளை மனிதரே சுத்த்ம செய்யும் நிலை ஒழிக்கப்படும்
திமுக ஆட்சி
முழுவதும் தொழில்நுடப் இயந்திரம் கொண்டே செயல்படுத்தப்படும். இந்த
திட்டங்கள் அனைத்தும் 2031 வரை திமுக ஆட்சி நீடித்தால் மட்டுமே செய்ய
முடியும். இதோடு நிறைய மக்களுக்கான திட்டங்களும் ஆட்சிக்கு வந்தவுடன்
செயல்படுத்தப்படும் என்றார் ஸ்டாலின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக