செவ்வாய், 23 ஜூன், 2020

தாய்லாந்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி சோதனை வெற்றி வீடியோ


மாலைமலர் : தாய்லாந்தில் கொரோனா வைரசுக்கு எதிராக குரங்குகளிடம் நடத்தப்பட்ட தடுப்பூசி சோதனை வெற்றி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாங்காக்: உலகையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகள் ஈடுபட்டு உள்ளன.
இதில் சில நாடுகள் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று வருகின்றனஅந்தவகையில் தாய்லாந்து நாடும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்து உள்ளது. இந்த தடுப்பூசியை முதற்கட்டமாக கடந்த மாதம் 23-ந்தேதி குரங்குகளுக்கு செலுத்தி சோதிக்கப்பட்டது. சராபுரியில் உள்ள தேசிய முதல்நிலை ஆய்வு மையத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனை வெற்றி அடைந்து உள்ளது.
தடுப்பூசி போடப்பட்ட குரங்குகள் அனைத்தும் எவ்வித பக்க விளைவுகளும் இன்றி நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த குரங்குகளுக்கு அடுத்தகட்ட பரிசோதனைக்காக நேற்று 2-வது டோஸ் மருந்து ஏற்றப்பட்டது.

இந்த சோதனையும் வெற்றி பெற்றால் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் என தாய்லாந்து அறிவியல், உயர்கல்வி, ஆய்வுத்துறை மந்திரி சுவிட் மாய்சின்சீ தெரிவித்தார்.

தாய்லாந்து நாடு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரித்து முதற்கட்ட சோதனையில் வெற்றி பெற்றிருக்கும் விவகாரம் உலக அளவில் கவனம் பெற்று உள்ளது

கருத்துகள் இல்லை: