வெள்ளி, 26 ஜூன், 2020

பொம்பியோ: ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க படைகளை இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் நியமிக்க பரிசீலனை


tamilmurasu.com : அதிபர் டிரம்ப்பின் அறிவுறுத்தலின் பேரில் இந்தப் பரிசீலனை மேற்கொள்ளப்படுகிறது என்றும் இதன் அங்கமாக ஜெர்மனியில் தமது படைகளை 52,000த்திலிருந்து 25,000ஆக குறைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது என்றார் மைக் போம்பியோ. படம்: ராய்ட்டர்ஸ் சீனாவின் அச்சுறுத்துல் அதிகரித்து வருவதையடுத்து, ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கப் படைகளை ஆசியாவில் நியமிப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ கூறியுள்ளார் இந்தப் பரிசீலனை அதிபர் டிரம்ப்பின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் இதன் அங்கமாக ஜெர்மனியில் தமது படைகளை 52,000த்திலிருந்து 25,000ஆக குறைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது என்றார் மைக் போம்பியோ.

“சில இடங்களில் அமெரிக்கப் படைபலத்தைக் குறைத்து சீன ராணுவத்தினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நாடுகளான இந்தியா, மலேசியா, வியட்னாம், இந்தோனீசியா, தென்சீன கடல் பகுதி சவால்களைச் சமாளிக்க அமெரிக்க ராணுவத்தை இப்பகுதிகளில் பயன்படுத்தி, இவ்விடங்களைப் பலப்படுத்த திட்டமிட்டு வருகிறோம்.
"எனவே, அமெரிக்க படைபலம் குறைக்கப்படும் நாடுகள் தங்களுக்கான பாதுகாப்பை தாங்களே வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் சீன ராணுவத்தை எதிர்கொள்ள அங்கு படைபலத்தைக் கூட்ட முடியும், இது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுடன் முழு ஆலோசனைகளை மேற்கொள்வோம்,” என்றார் திரு பொம்பியோ.
ஜெர்மனியிலிருந்து அமெரிக்கா தன் படைகளைக் குறைத்தால் ஐரோப்பாவில் ரஷ்யாவின் ஆதிக்கம் தலைதூக்கும் என்ற விமர்சனங்கள் ஏற்கெனவே எழுந்துள்ளன.
ஆனால் பொம்பியோ இந்த வாதங்களை மறுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: