வெள்ளி, 26 ஜூன், 2020

கனிமொழியின் பாதுகாப்பு போலீஸ் வாபஸ்.. தனியார் செக்கியுரிட்டிகளை ...


amil.oneindia.com - hemavandhana : சென்னை: இரண்டு நாட்களாக சாத்தான்குளம் விவகாரத்தில் எடுத்த அதிரடிகளில் மொத்தமாக  தொகுதி மக்களின் மனசிலும் நின்றுவிட்டார் எம்பி கனிமொழி!
வழக்கமாக, சென்னையில் உள்ள கனிமொழியின் வீட்டு வாசலில் 10 போலீஸ்காரர்கள் எந்நேரமும் இருப்பார்கள்.. ஆனால், நேற்று ஒருத்தரையும் காணவில்லை.. அதனால் உடனடியாக தனது பாதுகாப்பிற்கு தனியார் செக்யூரிட்டிகளை அவசர அவசரமாக வரவழைத்தார்..
இதற்கெல்லாம் காரணம்.. சாத்தான்குளம் விவகாரத்தில் கனிமொழி காட்டிய ஆவேசமான அக்கறைதான்.. சாத்தான்குளம் போலீசாருக்கு எதிராக டிஜிபியை நேரில் சந்தித்து புகாரையும் அளித்துவிட்டு வந்த மறுநாளே வீட்டில் பாதுகாப்பு போலீசார் வாபஸ் பெறப்பட்ட சம்பவம் அரங்கேறியது
முன்னதாக, கனிமொழிக்கு நெருக்கமாக இருந்த ஒரு காவல்துறை அதிகாரியும் வேறு பதவிக்கு மாற்றப்பட்ட நிகழ்வும் அரங்கேறியது...
கனிமொழிக்கு எந்த மிரட்டலும், அச்சுறுத்தலும் இல்லை என்று இது சம்பந்தமாக கமிஷனர் நேரடியான விளக்கம் தந்தாலும், இது பரபரப்பானது.. அதுமட்டுமல்ல, திமுக மேல்மட்டம் இந்த விஷயத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றும் திடீர் பரபரப்பு கிளம்பியது. ஆனால் இதை கனிமொழி கண்டுகொள்ளவில்லை. அதேசமயம், பாதுகாப்பும் திரும்பி வந்தது.
இதற்கெல்லாம் காரணமான சாத்தான்குளம் விவகாரத்தில் கனிமொழியின் அதிரடிகள் அனைவரையும் மலைக்க வைத்தது. . இந்த மரணத்தை அனைவருமே கண்டித்து அறிக்கை விட்டனர்.. காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி, ஜெயராஜ் நாடார் மரணத்துக்கு நியாயம் என்றே பகிரங்க அறிக்கை விட்டார்.

 ஆனால் அடிப்படையில் ஒரு பெண்ணாக, இரு குடும்ப ஆண்களை இழந்து பரிதவிக்கும் ஒரு குடும்பத்தின் உணர்வுகளை முழுமையாக உள்வாங்கியவராக இயல்பாகவே தனக்குள் இருக்கும் ஈர உணர்வுடன் அதி வேகமாக களம் இறங்கினார் கனிமொழி... டிஜிபி அலுவலகத்திற்கு அவர் விரைந்து செல்ல இதுவே முக்கியக் காரணம். இதற்காக அவர் கட்சித் தலைமையின் அனுமதியைக் கூட எதிர்பார்க்கவில்லை. காரணம் இது கட்சி சார்பானது அல்ல.. மாறாக இரு மனித உயிர்கள் அநியாயமாக பறிக்கப்பட்டதே என்ற ஆதங்கமே காரணம்.

அடுத்தடுத்து வேகமாக செயல்பட்டு சாத்தான்குளம் மக்களின் அன்பைப் பெற்று விட்டார் கனிமொழி... காரணம் அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு களம் கண்டார். அந்த பரிதாபத்துக்குரிய குடும்பத்தில் தானும் ஒருவள் என்பதை அவர் நிலை நிறுத்தினார். அந்த பெண்களின் அழுகையில் சோகத்தில் மன பாரத்தில் தானும் பங்கு கொண்டார். இயல்பாகவே வந்த சோகம் அது. அவர் வேகமாக இறங்கிய பிறகுதான் திமுக தலைமையே களம் இறங்கியது.. மற்ற கட்சிகளும் சுதாரித்தன.. மேலும் நேற்று நடந்த இறுதி ஊர்வலத்திலும் கனிமொழி கலந்து கொண்டார்.
ஆக மொத்தம், தன் பாதுகாப்பு விஷயத்தில் இடர்பாடு வந்தபோதிலும், தலைமை போதிய அக்கறை காட்டாத போதிலும், சொந்த சாதி கட்சிகளே நாடார் என்று குறிப்பிட்டு மக்களை திசை திருப்ப முயன்ற போதிலும், அனைத்தையும் தனி ஒருவராக தவிடுபொடியாக்கிவிட்ட கனிமொழிதான் இந்த விவகாரத்திலும் ஸ்கோர் செய்துள்

கருத்துகள் இல்லை: