.hindutamil.in : காவல்துறை தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் சாத்தான்குளம் வியாபாரிகளின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு பட்டிருந்த சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை வாங்குவதற்காக அவர்களது உறவினர்கள் இன்று காலை 11 மணியளவில் வந்தனர்.
அங்கு கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் முன்னிலையில் சாட்சியங்கள் விசாரணை நடைபெற்றது. ஜெயராஜ் மனைவி செல்வராணி மற்றும் அவரது மூன்று மகள்கள் பெர்சி, பியூலா, அபிஷா உட்பட 9 பேர் தங்கள் தரப்பு கோரிக்கைகள் மற்றும் சாட்சியங்களை தெரிவிக்க அனுமதிக்கப்பட்டனர்.
அதில் 3 பேரின் முழு வாக்குமூலத்தையும் பதிவு செய்தபின் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. அதன் பின் அவர்களது சொந்த ஊரான சாத்தான்குளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை வைத்து உடலை வாங்குவதாகவும் ஜெயராஜின் மனைவியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வருவதினால், உடலை பெற்றுக் கொள்வதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக