tamil.oneindia.com - veerakumaran :
சென்னை:
உடற்கூராய்வு முடிவதற்கு முன்பே, கோவில்பட்டி சிறைச்சாலையில் உயிரிழந்த
தந்தை மகன் இறப்பின் காரணம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு
எப்படி தெரிந்தது, என்று திமுக எம்.பி.யான கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ் மற்றும் அவர் தந்தை ஜெயராஜ் ஆகியோர், குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கடையை திறந்து வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு, போலீசாரால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கோவில்பட்டி சிறைச்சாலையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
தமிழகம் முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அனைத்து எதிர்க் கட்சியினரும் கண்டித்துள்ளனர். இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்ட அறிக்கையில்,
சாத்தான்குளம் காவல் துறையினர் திரு.ஜெயராஜ் மற்றும் திரு.பென்னிக்ஸ் ஆகியோரை 19.06.2020 அன்று இரவு கைது செய்து, 20.06.2020 அன்று அதிகாலை சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவில்பட்டி கிளை சிறைச்சாலையில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இந்நிலையில், 22.06.2020 அன்று இரவு 7.35 மணிக்கு சிறையில் இருந்த திரு.பென்னிக்ஸ் தனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக கூறியதையடுத்து, சிறைக் காவலர்கள் திரு.பென்னிக்சை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். திரு.பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி இரவு 9.00 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், 23.06.2020 அன்று அதிகாலை சிறையில் இருந்த திரு.பென்னிக்சின் தந்தை திரு.ஜெயராஜ் தனக்கு
உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து, சிறை காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
சிகிச்சையில்
இருந்த திரு.ஜெயராஜ் அன்று காலை 5.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளார். நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த
திரு.பென்னிக்ஸ் மற்றும் திரு.ஜெயராஜ் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பாக,
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு
செய்யப்பட்டு, கோவில்பட்டி நீதித்துறை நடுவர் எண்.1 அவர்களின் விசாரணைக்கு
அனுப்பப்பட்டது. இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கூறியிருப்பதாவது:
கோவில்பட்டி சிறையில் தந்தை ஜெயராஜ் உடல்நலக்குறைவு காரணமாகவும், மகன் பென்னிக்ஸ் மூச்சுத் திணறல் காரணமாகவும் உயிரிழந்ததாக முதல்வர் கூறுகிறார். இன்னும் உடற்கூராய்வு முடிய வில்லை. அதற்குள் பழனிசாமி அவர்களுக்கு இறப்பின் காரணம் எப்படி தெரிந்தது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ் மற்றும் அவர் தந்தை ஜெயராஜ் ஆகியோர், குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கடையை திறந்து வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு, போலீசாரால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கோவில்பட்டி சிறைச்சாலையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
தமிழகம் முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அனைத்து எதிர்க் கட்சியினரும் கண்டித்துள்ளனர். இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்ட அறிக்கையில்,
சாத்தான்குளம் காவல் துறையினர் திரு.ஜெயராஜ் மற்றும் திரு.பென்னிக்ஸ் ஆகியோரை 19.06.2020 அன்று இரவு கைது செய்து, 20.06.2020 அன்று அதிகாலை சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவில்பட்டி கிளை சிறைச்சாலையில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இந்நிலையில், 22.06.2020 அன்று இரவு 7.35 மணிக்கு சிறையில் இருந்த திரு.பென்னிக்ஸ் தனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக கூறியதையடுத்து, சிறைக் காவலர்கள் திரு.பென்னிக்சை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். திரு.பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி இரவு 9.00 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், 23.06.2020 அன்று அதிகாலை சிறையில் இருந்த திரு.பென்னிக்சின் தந்தை திரு.ஜெயராஜ் தனக்கு
உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து, சிறை காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
விசாரணை
கனிமொழி கேள்வி
கோவில்பட்டி சிறையில் தந்தை ஜெயராஜ் உடல்நலக்குறைவு காரணமாகவும், மகன் பென்னிக்ஸ் மூச்சுத் திணறல் காரணமாகவும் உயிரிழந்ததாக முதல்வர் கூறுகிறார். இன்னும் உடற்கூராய்வு முடிய வில்லை. அதற்குள் பழனிசாமி அவர்களுக்கு இறப்பின் காரணம் எப்படி தெரிந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக