நீங்கள்தான் மக்கள் அரசா... பா.ரஞ்சித் கோபம்!
நக்கீரன் செய்திப்பிரிவு
:தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மெயின்
பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளை திறந்ததாக கூறி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். கோவில்பட்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பென்னிக்ஸ் திங்கள்கிழமை இரவும், அவரது தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்த சம்பவத்திற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாகவும், அரசின் விதிமுறைகளின் படி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இருவரும் உயிரிழந்ததற்கு காரணம் அவர்களின் உடல்நலக்குறைபாடு என்பது போல குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் முதலமைச்சர் காவல்துறைக்கு
ஆதரவாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று சமூக வலைதளத்தில் பலரும்
கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் திரைப்பட இயக்குனர்
பா.ரஞ்சித் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
“பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல்,
மிக கொடூரமாக நிகழ்த்தபட்டிருக்கும் சாத்தான் குளம் தந்தை, மகன்
படுகொலைக்கு அவர்களின் உடல் நலக்குறைபாடு தான் காரணம் என்று அறிக்கை
விடுத்து, படுகொலைக்கு காரணமான காவலர்களை காப்பதற்கு துணியும் தமிழக அரசே!
நீங்கள் தான் மக்களின் அரசா??” என்று கோபமாக விமர்சித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக