ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

ரஜினி : மோடியும் அமித்ஷாவும் அர்ஜூனனும் கிருஷ்ணனும் போல

சாவித்திரி கண்ணன் : கிருஷ்ணனையும்,அர்ஜினனையும் போன்றவர்களாம்
மோடியும்,அமித்ஷாவும்! இன்று, இப்படியாக இதை கண்டுபிடித்துச் சொல்லியுள்ளவர் வேறு யாருமல்ல, சாட்சாத் ரஜினிகாந்த்!
பிறகு,இதில் யார் கிருஷ்ணன் என்பதும்,யார் அர்ஜூனன் என்பதும் அவர்களுக்கே தெரியும் என்று ஜகா வாங்கிவிட்டார். இதன் மூலம் கிருஷ்ணன்,அர்ஜூனன் இடத்திற்கான இன்றைய நபர்கள், நாளை இடம் மாறக்கூடும் என்ற பயமோ, என்னவோ!
காஷ்மீர் விவகாரத்தில் இரண்டாகப் பிரிக்கப்பட்டதை ’’சிறப்பான நடவடிக்கை’’ என்று ரஜினி பாராட்டியிருக்கும் தொனியை வைத்துப் பார்க்கும் போது,இஸ்லாமியர்கள் தான் துரியோதினாபதிகளாகிறார்கள்!
அடப்பாவிகளா...!
உண்மையில் பார்க்கப் போனால், தற்போதைய நிலைமைப்படி பார்த்தால் 370 என்ற சேலை உருவப்பட்டவளாக - பாஞ்சாலியாக - பார்க்கப்படவேண்டியது காஷ்மீரிய இஸ்லாமியர்களைத் தான்!
அமித்ஷா தான் சேலையை உருவிய துச்சாதனன்!
மோடி தான் அதற்கு கட்டளையிட்ட துரியோதன்!

இது சூப்பர் ஸ்டாரின் பார்வை கோளாரா? அல்லது
அவர் சார்ந்திருக்கும் பார்ப்பனியக் கோளரா?
picture KHK. pillai

தினமலர் : சென்னை : மோடியும் அமித்ஷாவும் அர்ஜூனனும் கிருஷ்ணனும் போல என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீர் நடவடிக்கைக்காக அமித்ஷாவுக்கு ரஜினி பாராட்டு தெரிவித்துள்ளார்.

x;"> துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி பேசும்போது, ''ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டினார். அமித்ஷாவும் மோடியும், கிருஷ்ணன்-அர்ஜூனனை போன்றவர்கள். யார் கிருஷ்ணன், யார் அர்ஜூனன் என்பது நமக்கு தெரியாது; அவர்களுக்கு தெரியும் என்றும் ரஜினி கூறினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு குறித்த ஆவண புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நடிகர் ரஜினி பேசினார். அவர் பேசியதாவது: துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு மிகப் பெரிய ஆன்மிகவாதி. அவர் தவறுதலாக அரசியலுக்கு வந்து விட்டார். மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர் வெங்கைய்ய நாயுடு. 45 ஆண்டுகளுக்கு பிறகும் கூட என்னை நினைவு வைத்திருப்பவர்.




காஷ்மீர் நடவடிக்கைக்காக அமித்ஷாவுக்கு எனது பாராட்டுக்கள். காஷ்மீர் நடவடிக்கை குறித்து அவர் பார்லி.,யில் சிறப்பாக உரையாற்றினார். காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட விவகாரம் சிறப்பானது. அமித்ஷாவும், மோடியும் கிருஷ்ணனும் - அர்ஜூனனும் போன்றவர்கள். இவர்களில் யார் அர்ஜூனன், யார் கிருஷ்ணன் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இவ்வாறு ரஜனி பேசினார்

கருத்துகள் இல்லை: