புதன், 14 ஆகஸ்ட், 2019

அமிர்தலிங்கம் படுகொலை 1989 ஜூலை 13 ம் தேதி ... ஏக பிரதிகள் நாங்களே. புலிகள்! .. அமிதலிங்கம் பேட்டி வீடியோ



வளன்பிச்சைவளன் பதிவு - 105 #ஈழப்போரும் தமிழக
#ஈழத்தமிழர்களின்
பொறுப்பும் கடமையும்! அமிர்தலிங்கம் படுகொலை ஏக பிரதிகள் நாங்களே புலிகள் !
பல்வேறு சந்தர்ப்பங்களில் நிகழ்ச்சியில் தொடர்புள்ள கலாநிதி நீலம் திருச்செல்வன், திருமதி சரோஜினி யோகேஸ்வரன் திருமதி மங்கையர்கரசி அமிர்தலிங்கம், கலாநிதி பகீரதன் அமிர்தலிங்கம், வி. ஆனந்த சங்கரி, கோவைசேனாதிராசா ஆகியோருடன் இச் சம்பவங்கள் பற்றி விசாரித்து இருந்தேன் அந்த சம்பாஷனைகள் அடிப்படையில் எழுதுகிறேன்
டி. பி. எஸ். ஜெயராஜ்
புதுடில்லி கோபத்துக்கு அஞ்சி அமிர்தலிங்கத்திற்கோ அல்லது இதர த. வி. கூ தலைவர் களுக்கோ இந்தியா வில் வைத்து தீங்கிழைக்க விடுதலைப் புலிகள் முயற்சி செய்ய வில்லை. அமிர்தலிங்கம் சிறீலங்கா திரும்பியதும் அவர் அதன் இலக்காக மாறிப்போனார் தமிழ் தலைவர்களை அவர்களது பாதுகாவலர்களிடமிருந்து அப்புறப் படுத்தும் முயற்சியில் விடுதலைப் புலிகள் த. வி. கூ உடன் நேசத் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர்
த. வி. கூ எளிதில் ஏமாறும் இயல்புடையவரான யோகேஸ்வரனை விடுதலைப் புலிகள் தேர்வு செய்து அவரை அணுகினர். அன்பான யோகேஸ்வரன் எப்போதும் பையன்களில் சிலரால் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை கூடப் பொருட்படுத்தாது அவர்களிடம் எப்போதும் ஒரு பரிவினை கொண்டு இருந்தார்.

தமிழர்களிடத்து ஒரு பரந்த ஒற்றுமை ஏற்படுத்த வேண்டுமென்ற ஆர்வம் உள்ளவராகவும் அதற்காக த. வி. கூ உடன் வி. பு உட்பட அனைத்து குழுக்களிடையே சமரசத்தை ஏற்படுத்த உழைத்தார். யோகேஸ்வரனை முதலில் அனுகிய வர் அறிவு என்றழைக்கப் படும் சிவக்குமார். என்ற விடுதலைப் புலிகள் அங்கத்தினராவார். அவர் கொழும்பில் மற்றொரு பகுதியில் தங்கியிருந்து விடுதலைப் புலிகளுக்கு உளவு பார்த்து வந்தார். வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைமை அவரை சந்தித்து தமிழர்களின் ஒற்றுமைக்கான கருத்து மற்றும் வழிமுறைகள் பற்றி கலந்துரையாட விரும்புவதாகவும் தன்னிடம் தெரிவிக்க பட்டதாக அறிவு யோகேஸ்வரனிடம் சொன்னார். கொள்கை அளவில் எப்போதும் ஒற்றுமை ஏற்படுத்த ஆவலாக உள்ளவர் யோகேஸ்வரன். அதன் பின்னர் வவுனியாவில் உள்ள விடுதலைப் புலிகளிடமிருந்து விக்னா என அழைக்கப்படும் ஒருவர் தொலைபேசி மூலம் யோகேஸ்வரனை தொடர்பு கொண்டார் இயலுமா னால் அமிர்தலிங்கத்தையும் சிவசிதம்பரம் ஆகியோரை அவருடன் வவுனியாவிற்கு அழைத்து வருமாறு யோகேஸ்வரனை கேட்டார் அப்போது த. வி. கூ யின் தலைவர் சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் செயலாளராக இருந்தனர்.
மனக்கிளர்ச்சி அடைந்த யோகேஸ்வரன் அந்த பணியை ஏற்றெடுக்கும் ஆபத்தை எதிர்கொள்ள முடிவு செய்தார். அது தமிழர்களின் பாரிய ஒற்றுமைக்கான நலன்களுக்கு வேண்டி செய்யப் படுவதாக அவர் எண்ணினார். விடுதலைப் புலிகள் விடயத்தில் உண்மையாகவே வேட்கையுடன் உள்ளதா? என்பதை நிச்சயப் படுத்தும் வரை அந்த விடயத்தை மறைத்து வைக்க அவர் தீர்மானித்தார்.
#பாண்டிக்குளம்
1989 பெப்ரவரியில் யோகேஸ்வரன் தனது சகபாடிகளிடம் தான் மலைநாட்டுக்கு ஒரு குறுகிய விஜயம் செய்யப் போவதாக சொல்லி விட்டு ஒரு ஜீப் வண்டியில் தனது மனைவி சரோஜினியுடன் மற்றும் நம்பிக்கையான ஒரு சாரதியுடன் கொழும்புவை விட்டு புறப்பட்டார். கண்டி அருகில் ஒரு இடத்தில் வசிக்கும் ஒரு உறவுக்காரர் வீட்டில் சரோஜினியை இறக்கி விட்டு பின்னர் அவர் வடக்கு நோக்கி பயணமானார் வவுனியா நகரத்தில் இருந்து வடக்கே சில மையில் தொலைவில் உள்ள பாண்டிக்குளம் என்ற கிராமத்தில் உள்ள இரகசிய இடத்தில் யோகேஸ்வரன் புலிகளை சந்தித்தார். பாண்டிக்குளத்தில் வைத்து தான் தன்னை தொலைபேசியில் அங்கு வரும் படி அழைத்த விக்னா வின் அடையாளத்தை யோகேஸ்வரன் கண்டுபித்தார். விக்னா யாருமல்ல வவுனியா விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவராக கடமையாற்றிவரும் பீற்றர் லியோன் அலோசியஸ் என்பவர் தான். அலோசியஸ் யோகேஸ்வரனை மனப்பூர்வமாக வரவேற்று அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் வராததற்கு தனது ஏமாற்றத்தை தெரிவித்தார். அவர்கள் வர முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட யோகேஸ்வரன் முதலில் தான் தனியாக வந்து த வி கூ தலைவரகளுடனான சந்திப்பு தொடர்பான ஏற்பாடுகளை இறுதி செய்வதற்காக என்று தெரிவித்தார். அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோருடன் தான் விரைவில் பாண்டிக்குளம் திரும்பி வருவதாக அவர் சொன்னார். விடுதலைப் புலிகள் யோகேஸ்வரனை நன்கு உபசரித்தனர் அவருக்கு சுவையான கறியுடன் கூடிய உணவு பரிமாறப்பட்டது. புலிகளினால் வழங்கப் பட்ட வரவேற்பை கண்டு மகிழ்ச்சியும், திருப்தியும் அடைந்த யோகேஸ்வரன் தன் மனைவியை அழைத்து கொண்டு கண்டி வழியாக கொழும்பு திரும்பினார்.
விடுதலைப் புலிகளின் சந்திப்பிற்கு பிறகு யோகேஸ்வரன் புலிகளிடமிருந்து அதிக அழுத்தங்களை எதிர் கொள்ள துவங்கினார் பாண்டிக்குளத்திற்கு விடுதலைப் புலிகளை சந்திக்க அமிர்தலிங்கம், சிவசிதம்பரத்தை எப்போது அழைத்து வர போகிறீர்கள்? என அடிக்கடி வவுனியாவில் இருந்து அவருக்கு தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணமாக இருந்தன. கொழும்பில் இருந்து அறிவு என்கிற சிவக்குமாரும் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு அந்த விடயம் பற்றி வினவிக் கொண்டு இருந்தனர் எனினும் யோகேஸ்வரனுக்கு த. வி. கூ தலைவர்களிடம் சொல்ல தயக்கமாக இருந்தது எனவே விடயத்தை இழுத்து கொண்டே போனார். ஒரு கட்டத்தில் சிவசிதம்பரம் சென்னைக்கு சென்றார் யோகேஸ்வரன் இது பற்றி விடுதலைப் புலிகளிடம் சொன்ன போது, சிவசிதம்பரத்திற்காக காலத்தை வீணடிக்க வேண்டாம் அமிர்தலிங்கத்தை கூட்டிக் கொண்டு வவுனியா வரும் படி அவரிடம் சொல்லப் பட்டது
தான் விடுதலைப் புலிகளை வடக்கில் வைத்து சந்திக்க வேண்டும் என்ற யோசனையை அமிர்தலிங்கம் உறுதி பட நிராகரித்து விட்டார் யோகேஸ்வரன் இப்போது பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டார்.
இக்காலகட்டத்தில் விடயங்கள் ஒரு வித்தியாசமான திருப்பத்தை அடைந்தன ஜனாதிபதி பிரேமதாசா அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் நேரடி பேச்சுவார்த்தையில் இறங்கியது புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், தலைமையில் மற்றும் அப்போதைய அரசியல் பிரிவு தலைவர் யோகி என்கிற நரேந்திரன் உட்பட புலிகள் குழுவொன்று பேச்சுக்காக கொழும்பு வந்தது நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடாத புலி அங்கத்தினர்களும் அவர்களுடன் சேர்ந்து கொழும்பு வந்தனர் அவர்களுக்கு மத்தியில் விக்னா என்ற அலோசியஸ் இருந்தார். பேச்சுக்களை ஒரு கவசமாக பயன்படுத்தி கொண்டு புலிகள் முறைப்படி கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஊடுருவி னர். அலோசியஸ் தங்குவதற்கு ஒர் இடத்தை கண்டு பிடித்து கொண்டார். அவர் திட்டமிட்ட படி அமிர்தலிங்கத்துடனான சந்திப்பை ஏற்பாடு செய்வது பற்றி யோகேஸ்வரனுக்கு தொல்லை கொடுக்க துவங்கினார். அமிர்தலிங்கம் மறுத்து விட்டார் என்பதை சொல்லவும் விரும்பாத யோகேஸ்வரன் ஒரு கடினமான இறுக்கமான மனநிலையில் தத்தளித்தார். இதனால் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு கொழும்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டார். அவ்வேளையில் விசு என்ற மற்றொரு புலித் தலைவருடன் அலோசியஸ் யோகேஸ்வரனை வந்து பார்த்தார்.
யோகேஸ்வரன் வைத்திய சாலையில் இருந்து வெளியேறிய பின்னரும் அலோசியஸ் மற்றும் சிவக்குமார் அந்த வீட்டுக்கே பலமுறை வந்து சென்றுள்ளனர் அந்த வருகைக்கான வெளிப்படையான காரணம் யோகேஸ்வரன் உடல் நிலை பற்றி விசாரிப்பதாக இருந்தது இந்த வருகை நீண்ட நேரம் நீடிக்க வில்லை ஜூலை 13 1989 க்கு முன்பு இவ்வாறான நான்கு சந்திப்புகள் இடம் பெற்றன. அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரத்தை கொழும்பில் வைத்து சந்திக்க தயார் என்று சிவகுமார் யோகேஸ்வரனிடம் அறிவித்தார் அவர்கள் வீட்டில் வைத்தே நடத்த ஏற்பாடு செய்யலாம் எனவும் அவர் சொன்னார். புலிகள் இந்த விடயத்தை ஆராய்ந்து அவர்கள் முடிவை அவருக்கு அறிவிப்பார்கள் என சிவகுமார் யோகேஸ்வரனிடம் சொன்னார். 1989 ஜூலை மாதம் 13 ம் தேதி காலை 10 மணி அளவில் யோகேஸ்வரனை அழைத்து அவரது ஆலோசனை விடுதலைப் புலிகளுக்கு சம்மந்தமாக உள்ளது .
அதே நேரம் மாலை 6 மணிக்கு நடத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார். புலிகளின் அழுத்தத்தை தாங்க முடியாத யோகேஸ்வரன் அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரத்தை சமாதானப்படுத்தி கொழும்பிலாவது சந்திக்க வேண்டும் என்று கேட்டு சம்மதிக்க வைத்தார்.
இதில் ஒரு சிக்கல் இருந்தது இராபோஜன விருந்து இந்திய உயர் ஸ்தனிகரால் கொழும்பு தாஜ் சமுத்திர ஹோட்டலில் நடைபெறுவதில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. யோகேஸ்வரன் அவர்களை புலிகள் சந்திப்பை முடித்து விட்டு விருந்தில் கலந்து கொள்ள இருவரையும் சம்மதிக்க வைத்தார். கிட்டத்தட்ட 4 மணி அளவில் அலோசியஸ் பேச்சு வார்த்தை க்கு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் யோகி, அன்டன் பாலசிங்கம் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து ஒரு வேண்டுகோள் வைத்தார் பாதுகாப்பு காவலர்கள் இவர்களிடம் மறைவாக உள்ள ஆயுதங்களை தேட நடத்தும் உடற்சோதனைகளோ அல்லது வேறு எந்த சோதனைகளையோ நடத்த வேண்டாம் என்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் சொல்லுமாறும் அது அவர்களின் அந்தஸ்தை அவமதிப்பது போல உணரச் செய்து விடும் என்றார். யோகி கலந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதை கேட்டு யோகேஸ்வரன் மகிழ்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து திட்டமிட்ட படி மாலை வர இருக்கும் விடுதலைப் புலிகளின் குழுவினரை சோதனை இட வேண்டாம் அதனால் அவர்கள் சங்கடப்படுவார்கள் என அறிவுறை கூறினார் ஆனால் அவர் மறுத்து விட்டார் எதுவும் நடக்காது என கூறி அவரை சம்மதிக்க வைத்தார் யோகேஸ்வரன்.
யோகேஸ்வரன் அரது மனைவி, சிவசிதம்பரம் மேல் தளத்திலும். அமிர்தலிங்கம் மற்றும் அவரது மனைவி கோவை சேனாதிராசா கீழ் தளத்திலும் வசித்து வந்தனர். நேரம் 6.40 விடுதலைப் புலிகளின் மஞ்சள் நிற சிற்றுந்து வந்தது எதிர்பார்ப்புக்கு முரணாக யோகி பிரசன்னமாயிருக்க வில்லை மூன்று புலிகள் விசு என்ற இராமையா, விக்னா என்ற அலோசியஸ், அறிவு என்ற சிவக்குமார் மூவரையும் காவலில் இருந்த பாதுகாவலர்கள் சோதனை செய்யாமல் உள்ளே அனுப்பினர் யோகேஸ்வரன் மேலே அனுப்பும் படி சொன்னார் விசுவும் அலோசியசும் மேலே சென்ற போது அறிவு கீழே நிலை கொண்டார் அவர்கள் படியேறிய போது யோகேஸ்வரன் பாதிவழியில் வாழ்த்தி வரவேற்றார் அவர்கள் அமர்ந்து பேசத் தொடங்கினர் சரோஜினி அவர்களுக்கு சாப்பிட ஏதாவது தயாரிக்க சென்றார் யோகேஸ்வரன் அங்கிருந்த வேலைக்கார பையன் ராஜீ, கீழே அமிர்தலிங்கம் அவரது மனைவி சேனாதிராசா தொலைக்காட்சி பார்த்து கொண்டு இருந்தனர் இந்திய தூதரின் விருந்துக்கு செல்ல அமிர்தலிங்கம் ஆடையணிந்து கொண்டிருந்தார். பின்னர் சிவாவும், அமீரும் மேலே சென்ற போது மஙகயற்கரசியும் சேனாதிராசாவும் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தனர்
அமீரும், சிவாவும் உள்ள நுழைந்த போது இரண்டு புலிகளும் எழுந்து நின்றார்கள் அமிர்தலிங்கம் அவர்களின் தோள்களை தட்டி அவர்களுக் கிடையே இருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தார் சிவசிதம்பரம் சற்று தள்ளி அமர்ந்து கொண்டார் யோகேஸ்வரன் எழுந்து சென்று தம் மனைவி தயாரிக்கும் தின்பண்டங்கள்க்கு உதவி செய்ய சென்று விட்டார். சரோஜினி தக்காளி சான்ட்விச் மற்றும் பிஸ்கட்டுகள் கொண்டு வந்தார். அவர்களுக்கு குடிப்பதற்கு என்ன வேண்டும் என்று கேட்டார். புலிகள் இருவரும் ஏதாவது மென்பானம் வேண்டும் என்று கேட்டார்கள் அமிர்தலிங்கம் தனக்கு தேநீர் வேண்டும் என்று கேட்டார். சிவசிதம்பரம், யோகேஸ்வரன் தங்களுக்கு ஏதுவும் வேண்டாம் என்றனர் சரோஜினி பழச்சாறு, தேநீர் தயாரித்து வைத்து விட்டு தனது அறைக்கு சென்று விட்டார்.
இதற்கிடையே கீழ்தளத்தில் சிவகுமார் குழப்பம் அடைய துவங்கினார். பரபரப்பாக அங்குமிங்கும் செல்வதும் அடிக்கடி ஆவலாக மேலே பார்ப்பதுமாக இருந்தார் இவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த பாதுகாவலர்கள் வலுக்கட்டாயமாக அவரை சோதனை செய்தனர் ஒரு கிரானைட் மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்து அவரை பாதுகாவலர் சத்தியமூர்த்தி யிடம் ஒப்படைத்து கந்தசாமி, திஸஸங்கே மேலே சென்று அவர்கள் பார்க்கா வண்ணம் எச்சரிக்கையுடன் நின்று கொண்டனர் உள்ளே இயல்பான நிலையில் கலந்துரையாடல் தொடர்ந்து கொண்டு இருந்ததது. அப்போது தான் அது நடந்தது கிட்டத்தட்ட 7. 20 இருக்கும் விசு தனது பானத்தை அருந்தி முடித்து விட்டு வெற்று கண்ணாடி குவளையை மேசை மீது வைப்பதற்காக எழுந்தார் பின்னர் அவர் அமிர்தலிங்கத்தை பார்த்த படி "ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள் புலிகளாகிய நாங்கள் தான் அரக்கர்கள் என்று ஆனால் உண்மையில் நீங்கள் எல்லாரும் தான் உண்மையான அரக்கர்கள்" என்று சொன்னார் மூவரும் விசு கேலி செய்கிறார் என்றே நினைத்தார்கள் அமீரும், சிவாவும் புன்னகை செய்த அதே சமயம் யோகேஸ்வரன் சத்தமாக சிரித்தார்உடனே விசு துப்பாக்கியை உருவி அமிர்தலிங்கத்தை நோக்கி சுடத் தொடங்கினார். யோகேஸ்வரன் சத்தமிட்டபடி கதிரையில் இருந்து எழுந்தார் அலோசியஸ் ஒரு துப்பாக்கியை வெளியே எடுத்து அவரை நோக்கி சுட்டார். சற்று தள்ளி சிவசிதம்பரம் அதிர்ச்சி யுடன் எழுந்து நின்றபடி வேண்டாம் வேண்டாம் என்று சப்தமிட்டார். விசு அவரை நோக்கி சுட்டபோது அவரது தோளில் பாய்ந்தது. துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு திஸஸங்கே உள்ளே எட்டிப் பார்த்தார். என்ன நடக்கிறது என்பதை கண்டதும் கண்ணாடி ஊடாக சுட்டு இருவரையும் காயப்படுத்தி கீழே சென்று தப்ப முயன்ற அறிவு என்ற சிவகுமாரையும் சுட்டு வீழ்த்தினர். மூன்று புலிகளும் கொல்லப் பட்டனர்

கருத்துகள் இல்லை: