வியாழன், 15 ஆகஸ்ட், 2019

செஞ்சோலை படுகொலைகள் .. உண்மையில் என்ன நடந்தது? எப்படி நடந்தது? சமுகவலையில் விவாதங்கள் ..

  Rubasangary Veerasingam Gnanasangary : செஞ்சோலை படுகொலைகள்.
இந்த துன்பியல் சம்பவம் நடக்கும்போது புலிகளால் கள்ள வாக்குகள் பொறுக்கி பாராளுமன்றம் போன தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதில் இருந்து பிரிந்து சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கும்பல் என்ன செய்துகொண்டிருந்தது?
தாக்கப்பட்டது புலிகளின் கட்டாய ஆயுத பயிற்சி முகாம் என்பதை ஏன் இந்த முட்டாள்கள் மறந்து விட்டனர். குண்டுத் தாக்குதல் நடத்தப் படுமுன்னர் புலிகளின் வாகன நடமாட்டங்களை இலங்கையின் ஆளில்லா விமானங்கள் படம்பிடித்து ஆதாரங்களை வெளியிட்டு இருந்தன. அங்கு இறந்தவர்கள் புலிகளால் வளர்க்கப்பட்ட அநாதை குழந்தைகள் அல்ல. புலிகளால் கட்டாய ஆயுதப் பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவிகள். ஏதோ புலிகள் வயல்களில் புல்லுப் புடுங்க அழைத்துச் சென்றமாதிரி அல்லவா கதை விடுகிறீர்கள். அந்த பிள்ளைகளின் உற்றார் உறவினர்களுக்கு எனது உண்மையான அனுதாபங்கள்.

Jeyan Deva பயிற்சி நடைபெறவுள்ள நேரமும் இடமும் புலிகளின் புலனாய்வுத்துறை மூலமாக முன்கூட்டியே இராணுவத்திற்கு தெரியப்படுத்தப்பட்டு  விட்டது என வடமராட்சியில் நான் சந்தித்த ஒரு அன்பர் சொன்னார்.


Rubasangary Veerasingam Gnanasangary அந்த நேரம் இலங்கை வான்படை வெளியிட்ட வீடியோவை நான் பார்த்தேன். பயிற்சி நடைபெறும் இடம் மரங்களால் சூழ்ந்திருந்தது. ஆனால் புலிகளின் வாகனங்கள் அங்கும் இங்குமாக ஓடித் திரிந்தவண்ணம் இருந்தது. அந்த சம்பவம் நடந்ததுமே வெளிநாட்டில் உள்ள உறவினர்கள் பலர் சாட்சி வழங்கினர்.

 Rubasangary Veerasingam Gnanasangary புலிகளிலும் double agents இருந்திருக்க வேண்டும்.

Jeyan Deva : செஞ்சோலை மரணங்களுக்கு பல தலையாரிகள் தமிழினியைப் பொறுப்பாக்கி விட்டு தம்மீதான பழியைக் கழுவ முயன்றனர். வான் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பயிற்சி நடத்துவது பாதுகாப்பனதல்ல என்ற தனது ஆட்சேபணை  ஏற்றுக் கொள்ளப்படவில்லை என அவர் கூறினார்.

Jeyan Deva : தோல்விக்கான முக்கிய காரணங்களில் இராணுவ புலனாய்வின் ஊடுருவல் முக்கியமானது. இறுதிக் கட்டத்தில் பொட்டனின் உதவியாளராக இருந்த ஒருவர் குளம் உடைக்கும் நடவடிக்கை ஒன்றை தனித்து செய்வதாக்க் கூறிக் கொண்டு வரைபடங்களுடன் தப்பியோடி இராணவத்துடன் சேர்ந்து விட்டார். அதுவரை  அவர் பொட்டனின் நம்பிக்கையான உதவியாளர்.

Rubasangary Veerasingam Gnanasangary : கொழும்பில் மலையகத்தை சேர்ந்த ஒரு பெரிய காய் இருந்தார். அவர் இப்போ எங்க என்று தெரியவில்லை. Jeyan Deva : இறுதக் கட்டத்தில் இராணுவத்தின் வெற்றிக்கு கட்டாய பயிற்சிக்கு பிடிக்கப்பட்ட தமிழ் (பேசும்)  இளைஞர்களே பெருமளவில் உதவினார்கள் என தமிழினி என்னிடம் சொன்னார்.

Rubasangary Veerasingam Gnanasangary : ஆகக் கடைசி நேரத்தில் பல ஆயிரம் பேர் பிடித்து செல்லப்பட்டு பயிற்சியே இல்லாமல் ஆயுதங்களை திணித்து முன்னுக்குவிட்டு பலரை கொன்றுவிட்டனர். Jeyan Deva : துப்பாக்கியின் trigger ஐ எப்படி இழுப்பது என்பது மட்டுமே கடைசி நேர ஆயுதப் பயிற்சி..அந்த வேளையில் இராணுவம் குண்டு துளைக்காத அங்கிகளை அணிந்திருந்த்தை குழிகளுக்குள் பதுங்கிப் போன தலையாரிகள் அறியவில்லை..

 Rubasangary Veerasingam Gnanasangary : ஆமாம் Ganeshalingam Kanapathipillai : புலிகள் எப்போதும் மக்கள் இழப்புக்களை விரும்பியிருந்தனர்.காரணம் 1 சர்வதேசப்பிரச்சாரத்திற்காகவும் 2...இழப்புக்கள் நிகழ்ந்த மக்களிடம் இராணுவத்திற்கெதிரான மூர்க்கமான வெறுப்புக்களை ஏற்படுத்துவது….இது சேகுவேராவின் தியரியை புலிகளும் பின்பற்றைனர்...அது மிகத்தவறானது என இறுதியில் புரிந்துகொண்டனர்...சர்வதேசப்பிரச்சாரத்திற்காக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிவனேசன் எனும் எம் பியை கண்ணிவெடியில் கொன்றுவிட்டு அரசை பழிசுமத்தினர்.இதேபோல தீவுப்பகுதியில் ஒரு பாதிரியாரையும் கொன்றனர். Jeyan Deva : அப்ப தான் சர்வதேசம் கேட்கும் " என்பது அவர்களது சப்பைக்கட்டாக இருந்தது உண்மையே.

 Rubasangary Veerasingam Gnanasangary : புலிகள் நாவலித் தேவாலயம் மற்றும் நாகர்கோவில் பாடசாலை குண்டுத் தாக்குதல் மற்றும் பாரிய இடப்பெயர்வு ஆகியவற்றை நன்கு பயன்படுத்தினர். பணம் நல்லா சேர்ந்தது.

 Guna KurumanKadhu : Last week in the parliament one of the polition speech out ....... Who give the information to athourity

Suthar Man : அதில் இருந்து தப்பிய முன்னாள் பெண் போராளி எனக்கு சொன்னதும் அது ஆயுத பயிற்சிக்கு கட்டாயமாக பிடித்த பெண் பிள்ளைகள் தான் என்று....

 Nithyanandarajah Prashanthan : Great...

 Koushik Packiyanathan : ஸ்ரீதரன் MPய யாராவது mention பண்ண சொல்லுங்க....

Rubasangary Veerasingam Gnanasangary : அந்தாளின் history எனக்கு தெரியாது ஐயா. அதிபராக இருந்தாராம், எந்த பல்கலைக் கழகத்தில் என்ன பட்டம் பெற்றார் என்பது தெரியாது.

கருத்துகள் இல்லை: