வியாழன், 7 மார்ச், 2019

காலையிலேயே ஸ்டாலினுக்கு போனை போட்ட சுதீஷ்.. திகிலடிக்கும் தேமுதிக அரசியல்!

tamiloneindia :சென்னை: தேமுதிகவின் பலே பல்டிதான் இன்று தமிழகத்தின் பெரும் பரபரப்பு. மக்கள் மத்தியில் தேமுதிகவை அம்பலப்படுத்தி விட்டது அதன் பேர அரசியல்.
 உண்மையில், அதிமுகவிடம் முதல் ஆளாக போய் பாமக சீட் வாங்கி விட்டதுதான் தேமுதிகவின் முக்கியப் பிரச்சினையாக கருதப்படுகிறது. அந்தக் கடுப்பில்தான் தனது நிலையை விட்டு இறங்கி வராமல் பிடிவாதம் பிடித்ததாக தெரிகிறது. ஆனால் மறுபக்கம் அதிமுக இதை பொருட்படுத்தவே இல்லை... இறங்கவும் தயாராக இல்லை. பாஜக போட்டு அணத்தியதால்தான் தேமுதிகவிடம் அது பேசவே முன்வந்தது. அப்படி
வந்தும் கூட தேமுதிக இறங்கிவிராமல் வீம்பு பிடித்ததால்தான் அதிமுக தரப்பும் சற்று இறுக்கமாக மாறியதாம்.
 இந்த நிலையில் இன்று காலை தேமுதிக நடத்தியதுதான் மிகப் பெரிய டிராமா. பியூஷ் கோயலை சந்திக்க போகிறார் சுதீஷ் ஆனால் அதற்கு முன்பாகவே அவர் ஒரு வேலையை செய்துள்ளார். அதுதான் கிளைமாக்ஸ் காட்சியின் தொடக்கம்.
ஸ்டாலினுக்கு போன் ஸ்டாலினுக்கு போன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் அவர் தொடர்பு கொண்டுள்ளார். ஸ்டாலினிடம், நாங்க அங்க திருப்தியா இல்லை. அங்கிருந்து வெளியேற விரும்புகிறோம். உங்களது அணியில் எங்களைச் சேர்க்க முடியுமா என்று சுதீஷ் கேட்டதாக தெரிகிறது.


இதைக் கேட்டு ஜெர்க் ஆகியுள்ளார் ஸ்டாலின். நான் விருதுநகர் மாநாட்டில் பிசியாக இருக்கிறன். எதுவாக இருந்தாலும் உங்களது குழுவை துரைமுருகனிடம் பேச சொல்லுங்க. வந்து பார்த்துக்கலாம் என்று கூறி கட் செய்துள்ளார். கட் செய்த அவர் அடுத்து துரைமுருகனுக்குப் போனை போட்டுள்ளார்.

 என்ன இது இப்படி மாத்தி மாத்தி பேசறாங்க இவங்க என்று அங்கலாய்த்துள்ள ஸ்டாலின், அவர்கள் வந்தால் உட்கார வைத்துப் பேசுங்க. என்ன சொல்றாங்களோ கேட்டுக்கங்க. அப்புறம் பாத்துக்கலாம் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

இதன் பேரிலேயே துரைமுருகனும், தேமுதிக குழுவை சந்தித்தார். அனகாபுத்தூர் முருகேசன் அனகாபுத்தூர் முருகேசன் காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக செயலாளர் அனகாபுத்தூர் முருகேசன், முன்னாள் பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் கொண்ட குழு துரைமுருகனை தொடர்பு கொண்டுள்ளது. அறிவாலயம் வர விரும்புவதாக கூறியபோது அங்கே வேண்டாம். நேரா என் வீட்டுக்கு வந்துருங்க என்று கூறியுள்ளார்

துரைமுருகன். சரி என்று அங்கு போயுள்ளனர். எம்எல்ஏ காந்தி எம்எல்ஏ காந்தி துரைமுருகன் வீட்டுக்குப் போனால் ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்தி உள்பட பலர் புடை சூழ துரைமுருகன் இருந்துள்ளார். அவர்களிடம் போய் தேமுதிகவினர் தங்களது நிலையைக் கூறியுள்ளனர். கடைசி நேரத்தில் வந்துட்டீங்களே. சீட்டே இல்லையே என்று கூறிய துரைமுருகன், தலைவரிடம் சொல்கிறன். பார்க்கலாம் என்று கூறி அனுப்பி வைத்துள்ளார். என்ன முடிவு?

இப்போது பந்து ஸ்டாலின் வசம் வந்துள்ளது. அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதில்தான் திமுகவின் இமேஜும் அடங்கியுள்ளது.
அப்பம் பங்கிட்ட கதையாக கொடுத்த சீட்டுகளிலிரு்து ஆளுக்கு ஒன்றாக பிடுங்கி தேமுதிகவிடம் கொடுத்து உள்ளே இழுக்கப் போகிறாரா அல்லது ஸாரி சொல்லி கதவை சாத்தப் போகிறாரா.. மில்லியன் அல்ல அல்ல.. டிரில்லியன் டாலர் கேள்வி இது./tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: