செவ்வாய், 5 மார்ச், 2019

ஈரோடு பிரப் சாலையின் பெயரை மாற்றக்கூடாது ..மீனாட்சி சுந்தரனார் சாலை என மாற்ற எடப்பாடி அரசு ...

Between 1894 and 1933, Anthony worked for the London Christian Missionary Society in India,
where as a Reverend he helped establish 94 schools, 20 churches and two hospitals. Between 1927 and 1933, Anthony built a beautiful Christian church in Erode, India (known as “Brough Church” in his memory) and Gosh (CSI) Hospital located on Brough Road in Erode. Anthony's wife, Rosetta, died in 1928 in Erode, India. In 1935, Anthony married Jessie Winifred Inglis in Erode. In 1936, Anthony died in Norton, Somerset, England; and was buried in the Canford Cemetery on Canford Lane in Westbury-on-Trym, Bristol, England.
Kathiravan Mayavan : ஈரோடு நகர கிருஸ்துவர்கள் மற்றும் பொது மக்கள் சுமார் 500
பேர் திரண்டு வந்து ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பிரப் சாலையின் பெயரை மாற்றக்கூடாது என்று மனு அளித்தனர்.!
கடந்த 28 /02 2018 அன்று ஈரோடு வந்த முதல்வர் எடப்பாடியார் மேம்பாலத்தை திறந்து வைத்தது விட்டு பிரப் சாலை இனி மீனாட்சி சுந்தரனார் சாலை என்று ஏதோ கட்சிகாரர்களின் குழந்தைக்கு பெயரை வைப்பதைப் போல வைத்து விட்டு சென்று விட்டார்.
இதை கேள்விப்பட்ட 7 மணி நேரத்தில் பிரப் மெட்ரிகுலேசன் தாளாளர் மனக்கவலையில் இறந்தே போய் விட்டார்.

பிரப் துரை அவர்கள் 1910 இல் கல்வி ,மருத்துவம் ஆன்மீகப்பணி செய்து ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னையே அர்பணித்தும் ஈரோடு நகரமன்ற தலைவராக இருந்தவர்.இவரின் பெயரை ஆங்கிலேயர் காலத்து பெயர்களை மாற்றும் செய்யும் பொழுது கூட மாற்றாமல் 80 ஆண்டுகாலமாக உள்ள பெயரை மாற்றியதை கண்டு ஈரோடு நகர மக்களே கொந்தளிப்பில் உள்ளனர்.
எனவே ஆட்சியாளர்கள் உடன் பிரப் சாலையின் பெயரை மாற்றக்கூடாது இதே பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்று இன்று மாலை 6 மணிக்கு பிரப் சாலையில் உள்ள சி எஸ் ஐ திருமண மண்டபத்தில் ஒரு அவசர ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்துள்ளனர்...

கருத்துகள் இல்லை: