திங்கள், 30 ஜூலை, 2018

கொள்ளிடத்தில் தடுப்பணை: விவசாயிகள் சாலை மறியல்!

கொள்ளிடத்தில் தடுப்பணை: விவசாயிகள் சாலை மறியல்! மின்னம்பலம்:   கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயிகள் நேற்று (ஜூலை 29) சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் ஆதனூர் - நாகப்பட்டினம் மாவட்டம், குமாரமங்கலம் இடையே 400 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார்.
மேட்டூரில் இருந்து காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு ஆகியவற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் செல்லும் நீர் கீழணை எனப்படும் அணைக்கரையில் இருந்து கடலுக்குத் திறந்து விடப்படுகிறது.
பெருமளவு தண்ணீர் கடலுக்குச் சென்று வீணாவதைத் தடுக்க கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்திக் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆற்றுப்பாலத்தில் விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை: