வியாழன், 2 ஆகஸ்ட், 2018

இந்து அறநிலைய துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது- சிலை கடத்தல் .. டி டி வி தினகரன் உறவினர்

கவிதா ttv உறவினர்

THE HINDU TAMI : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயி லில் சோமாஸ்கந்தர் சிலை செய்த தில் மோசடி நடந்தது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம் பரநாதர் கோயில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது. சிவன், பார்வதி, முருகப்பெருமான் சேர்ந்தவாறு அருள்பாலிக்கும் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமாஸ்கந்தர் சிலை இக்கோயிலில் இருந்தது. அது சேதம் அடைந்ததால், அதற்கு பதிலாக புதிய சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்டது.
இந்த நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஒரு புகார் கொடுத்தார். ‘காஞ்சி புரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சோமாஸ்கந்தர் சிலை செய்ய பொதுமக்களிடம் இருந்து காணிக் கையாக தங்கம் வசூலிக்கப்பட்டது. ஆனால், புதிய சிலையில் சிறிதள வுகூட தங்கம் இல்லை’ என்று அதில் தெரிவித்திருந்தார்.
அதன்பேரில், சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கோயில் தலைமை ஸ்தபதி முத்தையா, செயல் அலுவலர் முருகேசன், சிலை செய்த மாசி லாமணி உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
கும்பகோணத்தில் ஸ்தபதி முத்தையாவுக்கு சொந்தமான சிற்பக்கூடத்தில்தான் புதிய சிலை செய்யப்பட்டது. எனவே, கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
சோமாஸ்கந்தர் சிலையில் 80 % செம்பு, 12% பித்தளை, 2% வெள்ளீயம், 1 % வெள்ளி, 5% தங்கம் இருக்க வேண்டும் என்பது ஆகம விதி. காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் தற்போது வைக்கப் பட்டுள்ள சோமாஸ்கந்தர் சிலையை 86 கிலோவில் செய்ய திட்டமிடப்பட்டது. 50 கிலோவில் சிலை, 36 கிலோ எடையில் பீடம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் சிலை 111 கிலோவில் செய்யப்பட்டுள்ளது. ஆகம விதிப்படி சிலையில் 5.75 கிலோ தங்கம் சேர்த்திருக்க வேண்டும். பிரத்யேக கருவிகளைக் கொண்டு சிலையை ஆய்வு செய்ததில், அதில் சிறிதளவும் தங்கம் இல்லை என்பது தெரியவந்தது.
சிலையில் சேர்ப்பதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பெற்ற சுமார் 8 கிலோ தங்கத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி கள் மோசடியாக அபகரித்துள்ள னர். அதன்பேரில் விசாரணை நடத்தி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை கைது செய்து கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் முன்னிலைப்படுத்தினோம். நீதிபதி அய்யப்பன் பிள்ளை, ஆக.14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து திருச்சி பெண்கள் சிறையில் கவிதா அடைக்கப்பட்டுள்ளார் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

vikatanவிகடன் :JAYAVEL B : சிலை கடத்தல் தடுப்பு பிரிவையே தமிழக அரசு கலைக்கும் அளவிற்கு கவிதாவின் கைது சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர் சர்ச்சையில் உற்சவர் சிலை! 
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உற்சவராக ‘சோமாஸ் கந்தர்’ அருள்பாலிக்கிறார். ஆகம விதிப்படி ஒரு கோயிலில் ஓர் உற்சவர் சிலைதான் இருக்க முடியும். ஆனால், 100 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான உற்சவர் சோமாஸ்கந்தர் சிலை, 2009-ல் காஞ்சி மடத்தால் செய்து தரப்பட்ட சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை ஒன்று, 2015-ம் ஆண்டு முத்தையா ஸ்தபதி, கூடுதல் ஆணையர் கவிதா மற்றும் ஆணையரால் செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் சிலை ஒன்று என மொத்தம் 3 உற்சவர் சிலைகள் இந்தக் கோயிலில் இருக்கின்றன. இது ஆகம விதிகளுக்கு முரண்பாடானது. இந்து அறநிலையத்துறை சார்பாகச் செய்யப்பட்ட புதிய சிலைகளில் தங்கம் கலக்கவில்லை எனவும் அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மற்றும் அவரின் மகன்கள் டில்லிபாபு மற்றும் தினேஷ் ஆகியோர் இந்து அறநிலையத்துறைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவந்தனர். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். அவர்களின் தொடர்நடவடிக்கை இந்து அறநிலையத்துறையே அதிரச் செய்துள்ளது.

சிலை கடத்தல் வழக்குகள்!
1992-ம் ஆண்டு இந்தக் கோயிலில் பூட்டு உடைக்கப்பட்டு பள்ளியறை சிவன் - பார்வதி சிலைகள் களவாடப்பட்டுள்ளன. அப்போது சிவகாஞ்சி காவல் நிலையத்தினரால் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் மாயமான சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று காவல்துறையினர் அளித்த அறிக்கையின்படி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
அதேபோல 1993-ம் ஆண்டு ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள தொன்மையான சோமாஸ்கந்தர் சிலையில் உள்ள சிறிய கந்தர் சிலை அறுத்து எடுக்கப்பட்டுக் களவாடப்பட்டது. இதற்கும் சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை முடிவில், `கண்டுபிடிக்க முடியவில்லை' என்று காவல்துறையினர் அறிக்கை கொடுத்ததால், விசாரணை முடித்து வைக்கப்பட்டது. தற்போது அந்தச் சிறிய கந்தர் சிலை எங்குள்ளது எந்த வெளிநாட்டு மியூசியத்துக்குக் கடத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என்பதெல்லாம் உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட புலன் விசாரணைக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட அந்த மியூசியத்தைச் சேர்ந்தவர்கள் சிறிய கந்தர் சிலையைத் தருவதாகவும் கூறியுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை: